வடகரா மக்கள் அமைதி விரும்பிகள்!

Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 வடகரா மக்கள் அமைதி விரும்பிகள்!

கேரளாவில் உள்ள, 20 லோக்சபா தொகுதிகளில், ஒன்றிரண்டை தவிர, அநேகமாக அனைத்துமே பதற்றமானவை தான்.அரசியல் என்பது, அந்த மாநில மக்களுக்கு சுவாசக்காற்று மாதிரி. காலையில் எழுந்து, செய்தித்தாள் படித்து முடித்ததும், அரசியல் செய்திகளை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் அலசாமல், அன்றைய பொழுது, அநேகம் பேருக்கு விடியாது.

இப்படி பொது ெவளியில், அரசியல் விவகாரங்களை விவாதிப்பதால் தானோ என்னவோ, அரசியல் படுகொலைகள், அதிகம் நடக்கும் மாநிலமாக, கேரளா விளங்குகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளில், 20க்கும் மேற்பட்டோர், அரசியல் காரணங்களுக்காக இங்கு கொல்லப்பட்டுள்ளனர். இதில், கம்யூனிஸ்ட்காரர்களின் பங்கு தான் அதிகம். அதற்கு அடுத்தபடியாக, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரும், காங்கிரசாரும் உள்ளனர்.அரசியல் பதற்றத்திற்கு பெயர் பெற்ற, வடகரா லோக்சபா தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, பல கொலை வழக்குகளுடன் தொடர்புடைய, பி.ஜெயராஜன் போட்டியிடுவார் என, அறிவிக்கப்பட்டதில் இருந்தே, இந்த தொகுதி மிகவும் பரபரப்பை அடைந்துள்ளது.

அத்துடன், கம்யூனிஸ்டுகளுக்கு கடும் போட்டியை தரக் கூடிய, காங்கிரஸ் வேட்பாளராக, கே.முரளீதரன் அறிவிக்கப்பட்டதும், எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. முரளியா, ஜெயராஜனா என்ற போட்டி தான் அதிகம். இவர்களுடன், பா.ஜ.,வின், சஜீவன், களத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒரு பிரிவாக கருதப்படும், ஆர்.எம்.பி., கட்சியின் தலைவர், டி.பி.சந்திரசேகரன், இடதுசாரி வேட்பாளருக்கு, கடந்த முறை போட்டியாக விளங்கினார்.அவர் மறைவுக்குப் பின், மனைவி, கே.கே.ரெமா, கம்யூ., வேட்பாளர் ஜெயராஜனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதுபோல, 'மாத்ருபூமி' நாளிதழின் நிறுவன ரும், ராஜ்யசபா, எம்.பி., யுமான, வீரேந்திரகுமார் தலைமையிலான, லோக்தந்த்ரிக் ஜனதா தளத்திற்கு, வடகரா தொகுதியில் செல்வாக்கு உள்ளது. அந்த கட்சி, கம்யூனிஸ்டுக்கு ஆதரவு தெரிவிப்பதால், ஜெயராஜனுக்கே அதிக ஓட்டுகள் கிடைக்கும் என, நம்பப்படுகிறது. எனினும், அமைதியை விரும்பும் மக்கள், அதிகம் உள்ள வடகரா தொகுதியில், கொலைகளுடன் தொடர்புடையவர்,எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட கூடாது என, நடுநிலையாளர்கள் நம்புகின்றனர்.

ஜெயராஜனை போட்டியில் நிறுத்தியிருப்பதே, 'இடதுசாரிகள் வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள்; பிற கட்சியினரால் துன்புறுத்தப்படுகின்றனர்' என்பதை காட்டத் தான். 'ஜெயராஜனின் கையை, சங் பரிவார் துண்டித்துள்ளது. அதுவே, கம்யூனிஸ்டு களின் அடையாளமாக விளங்குகிறது. அதனால் தான், அவரை வடகராவில் நிறுத்தியுள்ளோம்' என, கம்யூனிஸ்டுகள், சப்பைகட்டு கட்டுகின்றனர். இம்மாதம், 28ல் இங்கு தேர்தல் நடக்க உள்ளது. அதில் பதிவாகும் ஓட்டுகள்,மே, 23ல் எண்ணப்படும் போது, வடகரா தொகுதி, யார் பக்கம் செல்லும் என்பது தெரிந்து விடும்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
25-ஏப்-201902:25:54 IST Report Abuse
Murugan கொலைகாரனையும் ,கொள்ளைக்காரனையும் வீடு அனுப்புங்கள் ………………...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X