கோட்டை நகரை கைப்பற்றுவது யார்?

Added : ஏப் 18, 2019
Advertisement
கோட்டை நகரை கைப்பற்றுவது யார்?

ஆசியாவிலேயே மிகப் பெரிய கோட்டையான, சித்துார் கோட்டை உள்ள, ராஜஸ்தானின், சித்துார்கர்க் தொகுதியைக் கைப்பற்ற, பா.ஜ., மற்றும் காங்., இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

பல போர்களை சந்தித்துள்ள, மேவார் மண்டலத்தில் உள்ள சித்துார்கர்க், வரலாற்று சிறப்புமிக்கது. பல சிமென்ட் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. மார்பிள் எனப்படும் சலவைக் கற்களுக்கும், இந்தப் பகுதி பிரசித்தி பெற்றது. ராஜஸ்தானில் உள்ள, 25 தொகுதிகள், 29 மற்றும் மே, 9ல் தேர்தலை சந்திக்கின்றன. கடந்த தேர்தலில், 25 தொகுதிகளிலும், பா.ஜ., வென்றது.தற்போது, மாநிலத்தில் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளதால், போட்டி சற்று பலமாகவே உள்ளது. சித்துார்கர்க் தொகுதியில், கட்சிகள் மாறி மாறி வென்று உள்ளன.


போட்டி:

கடந்த, 2004ல், பா.ஜ.,வின் ஸ்ரீசந்த் கிருபளானி; 2009ல் காங்.,கின் கிரிஜா வியாஸ்; 2014ல், பாஜ.,வின், சி.பி. ஜோஷி வென்றனர். பா.ஜ.,வின், முந்தைய அமைப்பான, பாரதிய ஜன சங்கம், 1952ல், முதல் வெற்றியை பெற்றது. இந்தத் தொகுதியில், பல பிரபலங்களும் போட்டியிட்டு வென்றுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர், ஜஸ்வந்த் சிங், 1991 மற்றும் 1996ல் இங்கு வென்றார்.இந்தத் தேர்தலில், தற்போதைய, எம்.பி.,யும், பா.ஜ., இளைஞர் அணி மாநிலத் தலைவருமான, சி.பி.ஜோஷி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, காங்., சார்பில், கோபால் சிங் இத்வா களமிறங்கியுள்ளார். இவர், 2009ல், ராஜ்சமந்த் தொகுதியில் வென்றவர். இந்தத் தொகுதிக்கு உட்பட்ட, எட்டு சட்டசபை தொகுதிகளில், இவ்விரு கட்சிகளும், தலா, நான்கில் வென்றுள்ளன. பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால்,மீண்டும் வெற்றி கிடைக்கும் என, ஜோஷி நம்புகிறார்.


பிரபலம்:

பார்லியிலும் இவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இளம் வாக்காளர்கள் இடையே, இவர் பிரபலமாக உள்ளார்.அதே நேரத்தில், இந்தத் தொகுதியில், மாறி மாறி முடிவுகள் வந்துள்ளன.தற்போது, மாநிலத்தில், காங்., அரசு அமைந்துள்ளதால், தனக்கு வெற்றி கிடைக்கும் என, இத்வா நம்பிக்கையுடன் கூறுகிறார். மேலும், தான் சார்ந்துள்ள, ராஜபுத்ர சமூகத்தினர் ஓட்டுகளுடன், சிறுபான்மையினரின் ஓட்டுகளும் கிடைக்கும் என, அவர் நம்பிக்கையுடன் உள்ளார்.


33 வாக்காளர்கள்!

ராஜஸ்தானின் ஜெய்சல்மார் மாவட்டத்தில், மல்லிகாடா கிராமத்தில் உள்ள ஓட்டுச் சாவடியில், 33 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். மாநிலத்திலேயே, மிகவும் குறைவான வாக்காளர் கொண்ட சாவடி இது தான். பாலைவனப் பகுதியான இந்த கிராமத்துக்கு அருகில், மேனாவ் கிராமத்தில் உள்ள ஓட்டுச் சாவடியில், 52 வாக்காளர்களேஉள்ளனர்.கடந்த டிசம்பரில், இங்கு நடந்த சட்டசபை தேர்தலின் போது, தற்காலிக ஓட்டுச் சாவடி அமைக்கப்பட்டது. அப்போது, குளிர் காலம் என்பதால், பிரச்னை இல்லை. தற்போது, கோடை வெயில் கொளுத்துவதால், இந்த பாலைவன கிராமங்களுக்கு செல்லும், தேர்தல் அதிகாரிகள், தேவையான தண்ணீர், உணவு போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

- ஆபா சர்மா -
சிறப்பு செய்தியாளர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X