அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு தெரிவித்தாரா?

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (30)
Advertisement

தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிடும், துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், ரவீந்திரநாத்தை ஆதரித்து, முதல்வர், இ.பி.எஸ்., பேசுகையில், 'கர்நாடகாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், காவிரியின் குறுக்கே, மேகதாது அணை கட்டுவதற்கு, ஆதரவு அளிப்பதாக, காங்கிரஸ் தலைவர், ராகுல் கூறியிருக்கிறார்' என குற்றம் சாட்டினார். ஆனால், 'ராகுல் அப்படி பேசவே இல்லை; இது பொய்யான தகவல்' என, முதல்வர், இ.பி.எஸ்.,சுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பான, இரு தரப்பு கருத்துக்கள் இதோ...காரணம் இல்லாமல் எதிர்ப்பதா?


தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, முரண்பாடுகளின் மொத்த உருவ கூட்டணி. கோவை தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக, காங்கிரசார் தேர்தல் பணியாற்றுகின்றனர்.கேரளாவில், வயநாடு தொகுதியில், ராகுலுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தேர்தல் பணி செய்கின்றனர். ராகுலிடம், அரசியல் முதிர்ச்சி இல்லை. அதனால் தான், வட மாநிலங்களில், ராகுலை, 'பப்பு' என, அழைக்கின்றனர்.

'கர்நாடக விவசாயிகளை, காங்கிரஸ் அரசு பாதுகாக்கும்; மேகதாது அணை கட்டுவதற்கு, காங்கிரஸ் அரசு துணை நிற்கும்.'காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைப்பதற்கு, காங்கிரஸ் அரசு முயற்சி செய்யும்' என, கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ராகுல் பேசியுள்ளார். இப்படி, இரட்டை வேடம் போடக் கூடிய காங்கிரசையும், தி.மு.க.,வையும், எந்த விதத்தில் மக்கள் நம்புவர்?

'மோடி, மீண்டும் பிரதமராகக்கூடாது' என, எதிர்க்கட்சியினர் சொல்கின்றனரே தவிர, ஏன் வரக்கூடாது என்ற காரணத்தை, யாரும் சொல்ல முடியவில்லை. ஒரு நாட்டை, வல்லரசு நாடாக மாற்றுவது குற்றமா; 'மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்' எனச் சொல்வது குற்றமா; 'ஊழல், லஞ்ச லாவண்யம் இல்லாத, நாடாக மாற்றுவேன்' எனச் சொல்வது குற்றமா?

காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணிக்கு, மக்கள் நலன் சார்ந்த திட்டத்தை முன்னிறுத்த தகுதி இல்லை. மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் மோடியை, காரணம் இல்லாமல் எதிர்க்கின்றனர். தேசிய அளவில் ராகுல், தமிழகத்தில் ஸ்டாலின் என, ஒரு குடும்ப ஆட்சியின் பிடியிலிருந்து, நாட்டையும், தமிழகத்தையும் மீட்க வேண்டும் என, மோடி விரும்புகிறார். அதைத் தான் மக்களும் விரும்புகின்றனர்.

- ஆர்.எம்.பாபு முருகவேல், முன்னாள் எம்.எல்.ஏ., செய்தி தொடர்பாளர், அ.தி.மு.க.,


ஓட்டு வங்கி அரசியல்


அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., கூட்டணி, புலி, ஆடு, பூனை, எலி, தவளை கூட்டணி அமைத்தது போன்று, பொறி வைத்து, வலை வைத்து, உருவான கூட்டணியாக உள்ளது. யாருக்கு யார் இரை எனத் தெரியாமல், கூட்டணி அமைத்துள்ளனர். மக்களை சித்ரவதை செய்கிற, இன்னலுக்கு ஆளாக்குகிற புலியைப் பிடிக்க, ஆட்டை கூண்டுக்குள் வைக்கிற மாதிரி, தமிழக மக்கள், அ.தி.மு.க., என்கிற ஆட்டை பலி கொடுத்து, புலியை பிடித்து, மீண்டும் காட்டிற்கு விரட்டுகிற பணியை செய்ய காத்திருக்கின்றனர்.

இப்படியொரு கூட்டணியை அமைக்க காரணமாக இருந்த, முதல்வர், இ.பி.எஸ்., மேகதாது அணை கட்டுவதற்கு, ராகுல் ஆதரவு தெரிவித்ததாக, பொய் செய்தியை, பிரசார மேடையில், பிரதமர் மோடியின் முன் பேசியது, கண்டனத்துக்கு உரியது.காவிரி பிரச்னையில், பலமுறை பேச்சு நடத்தியும், நீதிமன்ற தீர்ப்புகளை மதித்தும், கடந்த காலங்களில், காங்கிரஸ் அரசு, உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தல் நேரத்தில் கூட, 'தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியபோது, 'அதை, உடனே நிறைவேற்ற வேண்டும்' என, கர்நாடக அரசை, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, அரசிதழில் வெளியிட வேண்டும் என்ற, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், உடனே அமல்படுத்தினார். மக்களின் ஜீவதார பிரச்னையை முன்னிறுத்தி, ஓட்டு வங்கி அரசியலை, காங்கிரஸ் ஒருபோதும் செய்யாது. காவிரி பிரச்னையில், யார் துரோகம் செய்தனர்; யார் வெறும் கடிதம் எழுதி, நாடகம் நடத்தினர்; காவிரி மேலாண்மை வாரியத்தை, உரிய காலத்தில் அமைக்காமல் இருப்பது யார் என்பது, மக்களுக்கு தெரியும்.

நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி, நியாயமான உரிமைகளை பெற்று விட்ட பின்னும், ஒரு வலுவான காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு போன்றவற்றில், முறையான உறுப்பினர்களை நியமித்து, அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வராத, திராணியற்ற முதல்வர், ராகுல் சொல்லாதவற்றை சொன்னதாக சொல்லி, ஒரு மலிவான அரசியலை நடத்துகிறார்.

-சிவ.ராஜசேகரன், மாவட்டத் தலைவர், சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ்

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
18-ஏப்-201917:52:42 IST Report Abuse
natarajan s மேகதாது அணைகள் feasibility ரிப்போர்ட் கொடுக்க MOEF (மத்திய வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகம்) அனுமதி அளித்தது.அந்தெ ரிப்போர்ட்டை வைத்துதான் எவ்வளவு காடு அழிக்கப்படும் water spread area எவ்வளவு displacement of land and people (if any) போன்ற தகவல் பெற எதுவாக இதெற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கும். இந்த மாதிரி survey DPR எதுவும் செய்யாமல் நேரடியாக நிலைஎடுப்பில் ஈடுபட்டதால்தான் எட்டு வழி சாலை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த அறிக்கை வந்தவுடன் அணைகட்ட அனுமதியெல்லாம் கிடைக்காது இது நீதிமன்ற கண்காணிப்பில் உள்ளது ஆகவே தேர்தலில் ஒட்டு வாங்க என்னவேண்டுமானாலும் பேசலாம் நடைமுறையில் உடனே சாத்தியமில்லை. அங்கு BJP இருந்தாலும் இதைத்தான் செய்வார்கள் அவர்களது interest தான் அவர்களுக்கு முக்கியம். நம்மவர்களுக்கு quarter Biyani ஓட்டுக்கு எவ்ளவு இதுதான் முக்கியம். இவளவு காலமாக கொள்ளிடம் மூலம் கடலுக்கு சென்ற தண்ணீரை தடுக்க Barage காட்டாமல் முக்கொம்புஇல் 50 அடிக்கு மணல் எடுத்ததால் ஏற்பட்ட அழிவை நியாய படுத்தும் அரசியல் வியாதிகளுக்கு எவன் எங்கு அணைக்கட்டினால் என்ன? அதன்பின் காவேரியில்உள்ள கொஞ்சநஞ்ச மணலையும் காசாக்கிவிடலாம் என்ற மனநிலையில்தான் உள்ளார்கள்.மக்கள் எழுச்சி எற்படாதவரை எந்த மாற்றமும் நிகழாது.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
18-ஏப்-201917:38:18 IST Report Abuse
 nicolethomson அன்று இருந்து இன்று வரை காங்கிரஸ் தான் தமிழகத்திற்கு தண்ணீர் தருவதை பிரச்னை செய்து கொண்டே இருக்கு ஆனா தமிழகத்தில் அந்த காங்கிரசிற்கு எதிர்ப்பு கூட இல்லை
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
18-ஏப்-201915:58:58 IST Report Abuse
Endrum Indian மேகதாது ஆணை கட்ட பப்பு தி கிரேட் ஆதரவு தரவில்லையென்றால் எதிர்ப்பாவது செய்திருக்கிறாரா அதை டாஸ்மாக் நாடு பிரச்சாரத்தின் போதாவது சொன்னாரா???சொல்லுப்பா கே.எஸ்.அழகிரி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X