பொது செய்தி

தமிழ்நாடு

2ம் கட்ட தேர்தல் அமைதியாக முடிந்தது

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (11)
Advertisement

புதுடில்லி : தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் இன்று(ஏப்.,18) 2ம் கட்ட லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது







தமிழகத்தில் 38, கர்நாடகாவில் 14, மகாராஷ்டிராவில் 10, உ.பி.,யில் 8, அசாம், பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 5, சத்தீஸ்கர் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 3, காஷ்மீரில் 2, மணிப்பூர் மற்றும் திரிபுராவில் தலா 1, புதுச்சேரியில் 1 என மொத்தம் 96 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. 2ம் தேர்தலுக்கான பிரசாரம் 16ம் தேதி மாலையுடன் ஓய்ந்த நிலையில், இன்று(ஏப்.,18) ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. தமிழகத்தில் பண பறிமுதல் விவகாரம் தொடர்பாக வேலூர் தொகுதி லோக்சபா தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


சென்னை தேனாம் பேட்டையில் உள்ள வாக்கு மையத்திற்க்கு ஓட்டு போட  வந்தவர்கள் .இடம் : எஸ் .ஐ.இ.டி கல்லூரி

சென்னை தேனாம் பேட்டையில் உள்ள வாக்கு மையத்திற்க்கு ஓட்டு போட வந்தவர்கள் .இடம் : எஸ் .ஐ.இ.டி கல்லூரி




தேர்தலை ஒட்டி, ஒரு மாதமாக, தேர்தல் பிரசாரம் நடந்து வந்தது. தமிழகத்தில், அ.தி.மு.க., மற்றும், தி.மு.க., தலைமையில், கூட்டணி அமைந்துள்ளது. அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர், பன்னீர்செல்வம், பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பொருளாளர், பிரேமலதா உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.


காலை 7 மணிக்கு முன்பாகவே வாக்களிக்க ஆர்வத்துடன் எம்கேபி நகர் அரசு பள்ளி முன் வந்து காத்திருந்த பொதுமக்கள்.

காலை 7 மணிக்கு முன்பாகவே வாக்களிக்க ஆர்வத்துடன் எம்கேபி நகர் அரசு பள்ளி முன் வந்து காத்திருந்த பொதுமக்கள்.




தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, காங்., தலைவர், ராகுல், தி.மு.க., தலைவர், ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ ஆகியோர் பிரசாரம் செய்தனர். அ.ம.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, தினகரன், மக்கள் நீதி மையம் வேட்பாளர்களை ஆதரித்து, நடிகர் கமல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சீமான் ஆகியோரும் பிரசாரம் செய்தனர். அனைத்து தலைவர்களும், வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், ஒரு மாதமாக, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரசாரம் செய்தனர்.


உடுமலை மூங்கில்தொழுவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மகேந்திரன் ஓட்டு போட குடும்பத்துடன் வரிசையில் காத்திருந்தார்.

உடுமலை மூங்கில்தொழுவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மகேந்திரன் ஓட்டு போட குடும்பத்துடன் வரிசையில் காத்திருந்தார்.




இதுவரை இல்லாத அளவிற்கு, சமூக வலைதளங்களிலும், பிரசாரம் களைகட்டியது. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், எதிர்க்கட்சி வேட்பாளர்களின் குறைகளை பட்டியலிட்டும், வீடியோக்கள் வெளியிட்டு, அனைவரையும் திக்குமுக்காட வைத்தனர். இன்று, ஓட்டுப்பதிவு அமைதியாக நடக்க, அனைத்து விதமான ஏற்பாடுகளையும், தேர்தல் ஆணையம் செய்தது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BJPKAARAN - Coimbatore,இந்தியா
18-ஏப்-201917:38:59 IST Report Abuse
BJPKAARAN என் கருத்துக்கணிப்பு: 40 - 40 அதிமுக பிஜேபி கூட்டணி, 18 - 18 அதிமுக, 4 - 4 அதிமுக. வெற்றிமேல் வெற்றி
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201910:26:17 IST Report Abuse
Yaro Oruvan தற்போதுள்ள நிலையில் இந்தியாவிற்கு பாஜகவே நல்ல தேர்வு.. முந்தைய தேஜக ஆட்சி ஊழலின் உச்சகட்டமாக இருந்தது.. தற்போதைய பாஜகவிமன் ஆட்சியில் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.. போலி மதச்சார்பின்மைக்கு சவுக்கடி கொடுக்கப் பட்டுள்ளது.. ஒரு சில நிர்வாக தவறுகள் நடந்திருக்கலாம் தற்போதைய ஆட்சியில்.. ஆனால் ஆட்சியின் நோக்கமும் எண்ணமும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே இருந்தது.. எனவே மூன்றாம் ஆணை மாநில போலி மதவாத அரசியல்வியாதிகளுக்கு மாற்று என நினைத்து வாக்களிப்பது தலை அரிப்புக்கு கொள்ளிக்கட்டையை எடுத்து சொரிந்தது போல் ஆகிவிடும்.. பாத்து எல்லாவற்றையும் நினைத்து ஒட்டு போடுங்கள்.. ஜைஹிந்..
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
18-ஏப்-201909:00:18 IST Report Abuse
mindum vasantham சிங்கம் ராஜா வோட்டு போட்டதா காமிங்கப்பா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X