பொது செய்தி

தமிழ்நாடு

'ஓட்டு போடு நண்பா!' சமூக வலைதளங்களில் பதிவு

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (6)
Advertisement

சென்னை : வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று நடக்கும், லோக்சபா தேர்தலில், அனைவரும் ஓட்டளிக்குமாறு, சமூக வலைதளங்களில், பலரும், தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்.


தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த, லோக்சபா தேர்தலுடன், 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, இன்று (ஏப்.,18) நடக்கிறது. தேர்தல் ஆணையம் சார்பில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, பொது மக்களிடம், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த பணியில், தனியார் நிறுவனங்கள், இளைஞர் குழுக்களும் ஈடுபட்டன. இந்நிலையில், பலரும், 'உனக்கு, என்ன வேலை இருந்தாலும், தயவு செய்து, ஓட்டுப் போடு நண்பா; போடு, ஓட்டுப் போடு; என் ஓட்டு, கெட்டவங்களுக்கு வேட்டு' போன்ற வாசகங்களை, நேற்று காலை முதல், சமூக வலைதளங்களில், வேகமாக பதிவிட்டு வருகின்றனர்.


மேலும், முன்னணி தமிழ் நடிகர் ஒருவர் நடித்த படத்தில், ஓட்டுப் போடுவதன் அவசியம் குறித்து வரும் காட்சிகளையும் பதிவிட்டு, ஓட்டுப் போடுமாறு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதோடு, 'நாம் ஓட்டு போட வருவதை தடுக்க, அரசியல்வாதிகள் கலவரம் ஏற்படுத்தியும், பயம் காட்டுவர்; அதற்கு எல்லாம் பயப்படாமல், 'டிவி'யில் மூழ்காமல், ஓட்டுப் போட வேண்டும்' எனவும், அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prabu.KTK - Coimbatore,இந்தியா
18-ஏப்-201911:01:28 IST Report Abuse
Prabu.KTK இந்துக்கள் அனைவரும் ஒன்று பட்டு , ஹிந்து விரோத , தீய சக்தியான திமுகா வை தமிழ் நாட்டை விட்டே விரட்ட வேண்டிய காலம் இது ஹிந்துக்களே ஒன்று படுவீர் தமிழ் ஹிந்து கடவுள்களை ஸ்வாமி ஐயப்பனை அவமானப் படுத்திய திமுகா, தி க , போன்ற தேச , ஹிந்து விரோத சக்திகள் அழியட்டும் மற்ற எல்லா பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லும் சுடலை ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற மாட்டாராம் இளைஞர்களே சிந்திப்பீர்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஏப்-201908:17:54 IST Report Abuse
Bhaskaran நான் ஆறுமாதங்களாக ஊரில் இல்லை இந்த மாதம் தான் வந்தேன் வாக்காளர் பட்டியலில் இருந்து என்னுடைய பெயரை டெலிட் செய்துவிட்டார்கள் அக்கம் பக்கம் விசாரிக்காமல் தன்னுடைய கடமையை மிக சிறப்பாக செய்த அந்த அரசு ஊழியர் தன் பிள்ளைகுட்டிப்பேரன்களுடன் பல்லாண்டுகாலம் சுகவாழ்வுவாழ பிரார்த்திக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஏப்-201907:45:46 IST Report Abuse
Srinivasan Kannaiya மக்களுக்கு விலை வைத்த அவர்களை விலை இல்லாத சாதாரண குடிமகனாக ஆக்குங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X