தேச நலன், பாதுகாப்பு, வளர்ச்சி... உங்கள் விரல் நுனியில்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேச நலன், பாதுகாப்பு, வளர்ச்சி... உங்கள் விரல் நுனியில்!

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (66)
Share
இன்று நடப்பது, நம் தேசத்தின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய தேர்தல். எத்தனை பணிகள் இருப்பினும், எவ்வளவு தொலைவில் இருப்பினும், முதல் வேலையாக ஓட்டுச்சாவடிக்கு காலையிலேயே விரைந்து சென்று ஓட்டளியுங்கள்.'நான் ஒரு ஆள் ஓட்டுப் போடாவிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது...' என. சிலர் கருதலாம். இவ்வாறு பலரும் கருதுவதால் தான் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைகிறது. அவ்வாறு பதிவான

இன்று நடப்பது, நம் தேசத்தின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய தேர்தல். எத்தனை பணிகள் இருப்பினும், எவ்வளவு தொலைவில் இருப்பினும், முதல் வேலையாக ஓட்டுச்சாவடிக்கு காலையிலேயே விரைந்து சென்று ஓட்டளியுங்கள்.latest tamil news'நான் ஒரு ஆள் ஓட்டுப் போடாவிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது...' என. சிலர் கருதலாம். இவ்வாறு பலரும் கருதுவதால் தான் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைகிறது. அவ்வாறு பதிவான குறைந்த சதவீத ஓட்டுகளில், அதிக ஓட்டு பெற்ற, நாட்டின் நலனுக்கு பொருத்தமற்ற நபர் வெற்றி பெற்றுவிடுகிறார். இந்த தேசத்தின் வளர்ச்சி தடைபடுவது கெட்டவர்களின் செயலால் மட்டுமல்ல... கடமையை சரிவர செய்ய தவறும் நல்லவர்களாலும்தான்! எனவே கட்டாயம் ஓட்டளியுங்கள்.


latest tamil newsவயதானவர்கள், உடல் நலமற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் அருகில் வசிப்பின், அவர்களும் ஜனநாயக கடமையாற்ற உதவுங்கள். வாக்குச்சாவடிக்குள் ஓட்டு இயந்திரம் முன் நின்றபின், 'யாருக்கு ஓட்டளிக்கலாம்?' என பதற்றத்துடன் யோசிக்காமல், வீட்டிலிருந்து கிளம்பும் போதே, யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை தீர்மானியுங்கள்.


latest tamil news200, 300, 500க்கு ஓட்டுப்போடாமல், யாருக்கு ஓட்டளித்தால் இந்த தேசம் பாதுகாப்பாக இருக்குமோ... யாருக்கு ஓட்டளித்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் இந்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வார்களோ... அவர்களுக்கு ஓட்டளியுங்கள்.

அதுவே வருங்கால சந்ததியினருக்கு நாம் ஆற்றும் ஆகச்சிறந்த தொண்டு!

- தினமலர் -
நாட்டு பற்று... மக்கள் பணியில்...

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X