அரசியல் செய்தி

தமிழ்நாடு

பல சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (24)
Advertisement

சென்னை: காலை முதல் தமிழகத்தில் ஓட்டப்பதிவு வேகமாக நடந்து வருகிறது. ஓட்டுப்பதிவு மின்னணு இயந்திரம் சிறிது பழுது காரணமாக சில சாவடிகளில் ஓட்டுப்பதிவு தாமதமானது.பழுது ஆன சாவடிகள் வருமாறு:
சேலம் செட்டிமாங்குறிச்சி, நாகை தலைஞாயிறு ஓரடியம்புலம், கோவை, கடலூர், கோவை அரசு கல்லூரி ஓட்டுச்சாவடி எண் 77, மற்றும் 78 , திருப்பூர் வடக்கு ஓட்டுச்சாடி எண் 64 , நாமக்கல் கோட்டை நகராட்சி பள்ளி சாவடி , ஊட்டி காந்தல் 26 வது வார்டு பகுதியில் ஓம்பிரகாஷ் பள்ளி சாவடி , மதுரை மாவட்டம் பேரையூர் குருவப்ப நாயக்கன்பட்டி, மதுரை மாவட்டம் மேலூர் கிடாரிப்பட்டி. சேலம் ஆத்தூர் கெங்கைவல்லியில் நத்தக்கரை, ராமநாதபுரம் பாரதிநகர் , விருதுநகர் அவனியாபுரம் ஊராட்சி பள்ளி சாவடி, உசிலம்பட்டி முத்துப்பாண்டி பட்டி, ஆகிய பகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக ஓட்டுப்பதிவு தாதமானது.


பெரம்பலூர் திருச்சியில் பாதிப்பு


தேனி பெரியகுளம் செவன்த்டே பள்ளி , நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், ஆத்தூர் , திருவள்ளூர் மாவட்டம் காக்கனூர், கடம்பலூர், திருவூர், ஒட்டன்சத்திரம் கஸ்தூரி பள்ளி, ராமநாதபுரம் பாரதிநகர், கோவை சித்தாபுதூார் அரசு பள்ளி, பெரம்பலூர் தொகுதியில் மவுலானாபள்ளி, தண்ணீர்பந்தல், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட 10 சாவடிகள், கோவில்பட்டி வேலாயுதபுரம் ஒட்டுச்சாவடி, சென்னை அண்ணாநகர் மேற்கு ஓட்டுச்சாவடி, திருச்சி மாநகர் பகுதிகளில் 6 சாவடிகளிலும் , புறநகர் 9 சாவடிகளிலும், புதுக்கோட்டையில் 16 இடங்களிலும், ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக ஓட்டுப்பதிவு தாமதமானது.கமல் ஓட்டுப்போட முடியவில்லைசென்னை ஆழ்வார்பேட்டையில் மின்வெட்டு காரணமாக ஓட்டுப்பதிவு தாமதம் ஏற்பட்டது. இங்கு கமல் ஓட்டளிக்க முடியாமல் வரிசையில் காத்து நின்றார். உள்ளிட்ட சாவடிகளில் பழுது ஏற்பட்டது. சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். பழுது சரியானதும் கமல் தனது மகள் ஸ்ருதியுடன் ஓட்டளித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
18-ஏப்-201915:39:34 IST Report Abuse
Endrum Indian ஒட்டு இயந்திரம் பழுது : தொல்லை குருமா இதற்கு என்ன சொன்னார் தெரியுமா என்று டி.வீ. சேனல் செய்தியில் சொன்னார் ???எந்த பட்டனை அமுக்கினாலும் அதில் அ.தி.மு.க என்று தான் வருகின்றது என்று??? மக்களை எப்படி எல்லாம் உசுப்பேத்துகின்றார்கள் அவர்கள் உளறல்களினால், இவர்களை ஏன் தேர்தல் கமிஷன் வாழ் நாள் தடை செய்யக்கூடாது .
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஏப்-201913:58:13 IST Report Abuse
ஆரூர் ரங் எல்லாக் கட்சி பிரதிநிதிகளின் முன்பும் ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரமும் சோதனை செய்யப்பட்டுதான் வாக்குப்பதிவு தொடங்குகிறார்கள். லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முன்னூறு என்பது சிறிய அளவுதான். என்னதான் பழுது ஏற்பட்டாலும் முன்பு பதிவான வாக்குவிவரம் உள்ளேயுள்ள மெமரியிலிருந்து போகாது. எளிதாக ரெகவரி செய்து இயக்கலாம் நான் பேப்பர் வாக்குப் பதிவை பார்த்தவன். அதில் நடந்த தில்லுமுல்லுகளை பார்த்தவன் வாக்கெண்ணிக்கையில் கோல்மாலையும் பார்த்தவன். மீண்டும் கட்டைவண்டி யுகத்துக்கு யோகமுடியாது. மக்கள்தொகையும் வாக்காளர் எண்ணிக்கையும் பல மடங்கு ஆகிவிட்டது. வாக்குசாவடிகளின் மேலும் மேலும் பன்மடங்கு அதிகரிதல் நடவாது. பேப்பர் வாக்குபதிவில் ஒரு ஓட்டுக்கு ஒன்று முதல் இரண்டு நிமிடமாகும். இப்போது பத்து நொடிக்கு ஒரு வாக்கு பதிவு செய்யமுடிகிறது. அலுவலரின் பட்டியலிலுள்ள வாக்கெண்ணிக்கைக்கும் இயந்திர எண்ணிக்கைக்கும் சரியாக ஒத்துப்போவது இப்போதுதான்.. காகித வாக்கில் அது பெரும்பாலும் டாலியானதில்லை இப்போது செல்லாத ஓட்டுப் பிரச்னையும் அவற்றால் எண்ணிக்கையின்போது நடந்த கலாட்டா கலவரங்களுமில்லை .நிதர்சனத்தை ஏற்போம்
Rate this:
Share this comment
Cancel
Rajan - singapore,சிங்கப்பூர்
18-ஏப்-201913:35:58 IST Report Abuse
Rajan இந்தியாவில் எல்லாத்துறையிலும் அலட்சியம் அதிகம். அதற்கு தண்டனை பரவாயில்லை, அதுதான் நாட்டில் நுணுக்கனமாக சிந்திப்பதில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X