அரசியல் செய்தி

தமிழ்நாடு

பணத்திற்கு அடிமையாகாத வாக்காளர்கள்: ஸ்டாலின்

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (112)
Advertisement

சென்னை : ''தேர்தலுக்கு, கோடி கோடியாக செலவழித்தாலும், தமிழக ஆட்சியையும், மத்திய ஆட்சியையும், அப்புறப்படுத்தும் உறுதியை, மக்கள் எடுத்துள்ளனர்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி: மோடி, பிரதமராக இருக்கும் வரை, எது வேண்டுமானாலும் நடக்கும். ஏற்கனவே, அமலாக்கத் துறையை, சி.பி.ஐ.,யை, வருமான வரித்துறையை வைத்து, எப்படி மிரட்டினரோ, அதே அடிப்படை யில், தற்போது, தேர்தல் ஆணையத்தையும் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.


அப்புறப்படுத்தும் உறுதிஅதன் வெளிப்பாடாக, வேலுார் லோக்சபா தேர்தல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நியாய மாக, தேனி லோக்சபா தொகுதி தேர்தலை, நிறுத்த வேண்டும். அங்கு வேட்பாளராக நிற்கக்கூடிய, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மகன் சார்பில், 1,000 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் என, வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அது பற்றிய, 'வீடியோ'க்கள் வெளிவந்துள்ளன. அதற்கு, நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான, ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில், வருமான வரித்துறை சோதனை நடந்தது; இதுவரை நடவடிக்கை இல்லை.ஆளும் கட்சியினர், கோடி கோடியாக, தேர்தலுக்கு செலவழித்தா லும், ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்கினாலும், தமிழகத்தில் நடக்கும் ஆட்சி யையும், மத்தியில் நடக்கும் ஆட்சியையும், அப்புறப்படுத்தும் உறுதியை, மக்கள் எடுத்து இருக்கின்றனர்.


எவ்வளவு தான், பணத்தை கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும். இந்தத் தேர்தலில், அவர்களுடைய பாச்சா பலிக்காது. இந்த தேர்தல், ஒரு புதுமையான தேர்தலாக அமைய போகிறது. பணத்திற்கு அடிமையாகாத, பணத்திற்கு வளைந்து போகாத வாக்காளர்களை, இந்த தேர்தல் நிரூபிக்கப் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


காலை 6:00 மணிக்கே ஆஜராகுங்கள்'

ஓட்டுப்பதிவு மையங்களில், கட்சியினர், காலையிலேயே ஆஜராகி, ஓட்டளிக்க வேண்டும்' என, தி.மு.க.,வினருக்கு, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இத்தேர்தலில, வெற்றி பெற்று, அ.தி.மு.க., ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என, தி.மு.க., தலைமை, முழு வீச்சில் செயல்பட்டு உள்ளது.

இதை மனதில் வைத்து, பல்வேறு நடவடிக்கை களை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, ஓட்டுப்பதிவு நாளான இன்று, கட்சியினர் முழுவீச்சில் பணியாற்ற, பல்வேறு உத்தரவுகளை, அவர் ரகசியமாக பிறப்பித்துள்ளார்.
மாவட்ட செயலர்கள் வாயிலாக, கிளை செயலர் வரை, இந்த உத்தரவு, சென்றடைந்துள்ளது.இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: தி.மு.க.,விற்கு, இது மிகவும் சவாலான, அதே நேரத்தில் முக்கியமான தேர்தல். எனவே, இத் தேர்தலில், ஆளும் கட்சியின் வெற்றிக்கு வழி வகுத்து விடாமல் பணியாற்ற வேண்டும் என, ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக, கிளை செயலர்கள் முதல் மாவட்ட செயலர்கள் வரை, காலை, 7:00 மணிக்கே, தங்களது ஓட்டுகளை பதிவு செய்துவிட வேண்டும். அதன் பின், குடும்பத்தினர், தி.மு.க., மற்றும் கூட்டணி ஆதரவாளர்களை, ஓட்டளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக, காலை, 6:00 மணிக்கே, பூத்களில் நிர்வாகிகள் ஆஜராக வேண்டும்.தங்கள் வருகையை உறுதி செய்த தகவலை, ஒவ்வொரு நிர்வாகியும், தங்களுக்கு மேலுள்ள நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மாவட்ட செயலர்கள், அவ்வப்போது தொடர்பு கொண்டு, ஓட்டுப்பதிவுஉள்ளிட்ட நிலவரங்களை, தனக்கு தெரியப்படுத்த வேண்டும்.ஓட்டுப்பதிவு முடிந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பத்திரமாக எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்து செல்லப் பட்டதை உறுதி செய்த பிறகே, தி.மு.க.,வினர், ஓட்டுச்சாவடியை விட்டு வெளியே வர வேண்டும் எனுவும், ஸ்டாலின் கூறியுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


கேலிக்கு ஆளான ஸ்டாலின்


மதிப்பிழப்பு செய்யப்பட்ட, 1,000 ரூபாயை, பன்னீர்செல்வம் கொடுத்ததாக, ஸ்டாலின் அளித்த பேட்டி, சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.தேனி தொகுதி யில், அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளராக, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன், ரவிந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். காங்., சார்பில், முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன், அ.ம.மு.க., வேட்பாளராக, தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகின்றனர். வெற்றியை கைப்பற்றுவதில், இத்தொகுதியில் பலத்த போட்டி நிலவி வருகிறது.

தொகுதியில், பணப் பட்டுவாடா அதிகளவில் நடந்து வருவதாக, புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்த வீடியோக்களும், சமூக வலைதளங் களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது, 'தேனியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன், தேர்தலில் நிற்கிறார். அங்கு, 1,000 ரூபாய் நோட்டு கொடுப்பதாக, ஆதாரத்துடன், வீடியோ வெளிவந்திருக்கிறது. இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றார்.

கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக, நாட்டில் புழக்கத்தில் இருந்த, 1,000 ரூபாய் நோட்டுகள், 2016 நவம்பர் மாதம், செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அதற்கு பதிலாக, புதிய, 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய், புழக்கத்திற்கு வந்தன.செல்லாத, 1,000 ரூபாய் நோட்டை, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதாக, ஸ்டாலின் கூறியதை, பலரும் சமூக வலைதளங்களில் கிண்டலடித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (112)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
19-ஏப்-201905:28:58 IST Report Abuse
meenakshisundaram ஆமா சொல்லிப்பூட்டேன் .இது திமுக அல்லாதார்க்கு என் அட்வைஸ் .இல்லேனா திமுக காரன் முதலிலேயே போயி கள்ள ஒட்டு போட்டுடுவான்.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
19-ஏப்-201901:32:29 IST Report Abuse
jagan ஆமாம், நீர் குடுப்பதெல்லாம் செல்லாத 1000 ருபாய் நோட்டு. எவன் மதிப்பான்?
Rate this:
Share this comment
Cancel
palani kuppuswamy - sanjose,யூ.எஸ்.ஏ
18-ஏப்-201922:20:23 IST Report Abuse
palani kuppuswamy என்ன கொடுத்த பணம் யாரும் திருப்பி கொடுத்து விட்டார்களா , இல்லை எவ்வளவு கொடுத்தாலும் தி முகாவுக்கு ஒட்டு கிடையாது என்று முகத்தில் அடித்து விட்டார்களா ஸ்டாலின்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X