முதியவர்கள் 5 பேர் மயங்கி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர்கள் 5 பேர் மயங்கி பலி

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (4)

கோவை: தேர்தலில் ஓட்டுப் போட்ட பின் முதியவர்கள் 5 பேர் மயங்கி விழுந்து பலியானார்கள்.
கோவை மாவட்டம் ஈச்சனாரியில் உள்ள அரசு பள்ளியில், ஐயம்மாள் என்ற மூதாட்டி ஓட்டு போட வந்தார். அவரது ஓட்டை வேறு நபர் போட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், மயங்கி விழுந்த அவர் உயிர் இழந்தார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில், ஓட்டு போட்டு திரும்பிய முருகேசன் என்பவர் ஓட்டுச்சாவடியில் மயங்கி விழுந்து உயிர்இழந்தார்.
சேலம் மாவட்டம் வேடப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஓட்டு போட்ட பின் மயங்கி விழுந்து உயிர்இழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி குருங்கூர் ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போட வரிசையில் நின்ற மல்லிகா என்ற மூதாட்டி உயிர் இழந்தார்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே, ஓட்டு போட வந்த மூதாட்டி மயங்கி விழுந்து உயிர் இழந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X