ஓட்டுச்சாவடிகளை கைப்பற்ற சதி: திமுக புகார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடிகளை கைப்பற்ற சதி: திமுக புகார்

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (44)
Share
சென்னை: ஓட்டுச் சாவடிகளை கைப்பற்ற ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக திமுக சட்டத்துறை செயலர் கிரிராஜன், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ மற்றும் டிஜிபிக்கு அனுப்பிய கடிதம்: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு துவங்கிய காலை முதல் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி
ஓட்டுச்சாவடி, திமுக, தி.மு.க., அ.தி.மு.க., அதிமுக


சென்னை: ஓட்டுச் சாவடிகளை கைப்பற்ற ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக சட்டத்துறை செயலர் கிரிராஜன், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ மற்றும் டிஜிபிக்கு அனுப்பிய கடிதம்: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு துவங்கிய காலை முதல் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பெருந்திரளாக ஓட்டு போட்டு வருவதை பொறுத்து கொள்ள முடியாத ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மாலை 3.00 மணிக்கு மேல், தமிழகத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.


latest tamil news




இதற்கு போலீசாரும் ஒத்துழைக்கும் வகையில், போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாகவும், ஓட்டுச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை இந்த நேரத்தில் செயலிழக்க செய்ய போவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news





காங்., கோரிக்கை


இதனிடையே, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை சந்தித்த காங்கிரஸ் நிர்வாகிகள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்ட இடங்களில் ஓட்டுப்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X