பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
 இதே நாளில் அன்று

2013 ஏப்ரல் 19

சிவந்தி ஆதித்தன்: 'தினத்தந்தி' நிறுவனர், சி.பா.ஆதித்தனார்,- கோவிந்தம்மாள் தம்பதியின் இரண்டாவது மகனாக, 1936 செப்., 24ம் தேதி பிறந்தார், சிவந்தி ஆதித்தன்.தன் தந்தை, பத்திரிகை அதிபராக இருந்தபோதிலும், அச்சு கோர்ப்பது முதல், துணை ஆசிரியர் வரை, அனைத்திலும் பயிற்சி பெற்றார். 1959ல், அந்நாளிதழில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லுாரி, பெண்கள் கல்லுாரி, உடற்கல்வியியல் கல்லுாரி, கல்வியியல் கல்லுாரி ஆகியவற்றின் நிறுவன தலைவராக இருந்தார்.காமராஜர், அண்ணாமலை, பாரதிதாசன் ஆகிய பல்கலைகளின், 'செனட்' உறுப்பினராகவும், சென்னை பல்கலைக்கழக, சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவரின் சேவையை பாராட்டி, காமராஜர், அண்ணாமலை, மனோன்மணியம் சுந்தரனார், சென்னை பல்கலைக் கழகங்கள், டாக்டர் பட்டம் வழங்கின. 1982 மற்றும் 1983ம் ஆண்டுகளில், இரண்டு முறை, சென்னை மாநகர ஷெரீப் ஆக நியமிக்கப்பட்டார்.இந்திய ஒலிம்பிக் சங்கத்தின், வாழ்நாள் தலைவராக பணியாற்றினார். 2008ல், மத்திய அரசு, 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கவுரவித்தது.பத்திரிகை துறையில் தனி இடம் பிடித்த, சிவந்தி ஆதித்தன், காலமான தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
19-ஏப்-201910:22:17 IST Report Abuse
Loganathan Kuttuva பல கோயில் திருப்பணி வேலைகளை செய்துள்ளார்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
19-ஏப்-201906:07:24 IST Report Abuse
Bhaskaran தந்தி அலுவலகத்தில் பண்டல் கட்டுவதிலிருந்து அச்சு கோர்ப்பது போன்ற அனைத்திலும் பயிற்சி பெற்று பின் நிர்வாகப் பொறுப்பிற்கு வந்தார் அகில இந்திய கைபந்துக்கழகத்துக்கு தலைவராக இருந்தார் அவருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்பட்டுவருகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X