'என் ஷூ, ரொம்பவும் பலமானது'

Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (4)
Advertisement

ராஜ்யசபா, எம்.பி.,யும், - பா.ஜ., செய்தி தொடர்பாளருமான, நரசிம்ம ராவ் மீது, 'ஷூ' வீசப்பட்டது.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள, போபால் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர், திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, சாத்வி பிரக்யாவை, பா.ஜ., களமிறக்கியுள்ளது.

தேசிய அரசியலில், இந்த விவகாரம், விவாதங்களை கிளப்பியுள்ளதால், இது குறித்து, பா,.ஜ.,வின் செய்தி தொடர்பாளரான, ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், டில்லியில் நேற்று, பத்திரிகையாளர்களை சந்தித்தார். மற்றொரு மூத்த தலைவரான, புபீந்தர் யாதவும் உடனிருந்தார்.சாத்வி பிரக்யாவை வேட்பாளராக நிறுத்தியதை நியாயப்படுத்தி, நரசிம்ம ராவ் பேசியபோது, திடீரென ஒரு ஷூ பறந்து வந்தது. 'மேரா பூட்... சப்ஸே மஜ்பூத்' என, முழக்கமும் கேட்டது.அதாவது, 'என் ஷூ, ரொம்ப பலமானது' என்ற அர்த்தமுள்ள கோஷத்துடன், ஒரு நபர் வீசிய ஷூ, நரசிம்ம ராவ் சற்றே விலகியதால், அவர் முன் இருந்த, மேஜை மீது பட்டு, கீழே விழுந்தது. ஷூவை எறிந்தவரை, உடனடியாக காவலர்கள் பிடித்துவிட்டனர்.

விசாரித்தபோது, ஷூவை வீசியவர், ஷக்தி பார்கவா என்றும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசுகளின் பல்வேறு திட்டங்களை, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிப்பவர் என்றும் தெரிய வந்தது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஏப்-201908:46:10 IST Report Abuse
Srinivasan Kannaiya என்ன வக்கிரம்... நாகாரீகம் தரம் தாழ்ந்து விட்டது
Rate this:
Share this comment
Cancel
Ramanathan Balakrishnan - chennai,இந்தியா
19-ஏப்-201908:27:47 IST Report Abuse
Ramanathan Balakrishnan . இவர் மேல் அவர் வேலை பார்க்கும் பத்திரிகை நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம் .
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-ஏப்-201907:39:01 IST Report Abuse
ஆரூர் ரங்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X