இடைத்தரகன் மைக்கேலுக்கு ஈஸ்டருக்கு, 'ஜாமின்' மறுப்பு

Added : ஏப் 18, 2019
Advertisement

புதுடில்லி, 'ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழலில் கைது செய்யப்பட்ட, இடைத்தரகன் கிறிஸ்டியன் மைக்கேலுக்கு, 'ஈஸ்டர்' பண்டிகை கொண்டாட, 'ஜாமின்' அளிக்க முடியாது' என, டில்லி கோர்ட் உத்தரவிட்டது.

முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், வி.வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக, இத்தாலியைச் சேர்ந்த, 'அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் ஊழல் நடந்ததாக, புகார் எழுந்ததை அடுத்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர், விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில், இடைத்தரகனாக செயல்பட்ட, பிரிட்டனை சேர்ந்த, கிறிஸ்டியன் மைக்கேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிலிருந்து, நாடு கடத்தி வரப்பட்டு, கைது செய்யப்பட்டான்.தற்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மைக்கேல், அடுத்த வாரம், 'ஈஸ்டர்' பண்டிகை வரவு உள்ளதால், அதை கொண்டாடுவதற்காக, ஒரு வாரத்துக்கு மட்டும், 'ஜாமின்' அளிக்கும்படி, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தான்.இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டி.பி.சிங் வாதாடியதாவது:இந்தியாவில், ஏராள மான பண்டிகைகள் வருகின்றன. இதை கொண்டாடுவதற்காக, கைதிகள் அனைவருக்கும், 'ஜாமின்' அளிக்க முடியாது. மைக்கேல், சிறையிலேயே, ஈஸ்டர் பின்பற்றுவதை, யாரும் தடுக்கப் போவது இல்லை. மைக்கேலுக்கு, 'ஜாமின்' அளித்தால், இந்த வழக்கின் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு, அவர் வாதாடினார்.மைக்கேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், விசாரணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என்றார்.சி.பி.ஐ., தரப்பு வாதத்தை ஏற்ற, நீதிபதி, அரவிந்த் குமார், இடைத்தரகன் மைக்கேலின், 'ஜாமின்' மனுவை தள்ளுபடி செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X