பொது செய்தி

இந்தியா

வங்கதேச நடிகர்கள் வெளியேற உத்தரவு

Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி, மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக, பிரசாரம் செய்த, காஸி அப்துல் நுார் என்ற வங்கதேச நடிகரை, உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், ராய்கஞ்ச் லோக்சபா தொகுதியில், திரிணமுல், காங்., சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக, பிர்தவுஸ் அகமது என்ற வங்கதேச நடிகர், சமீபத்தில் பிரசாரம் செய்தார்.இதற்கு கடும் கண்டனம்தெரிவித்த மத்திய அரசு, பிர்தௌஸ் அகமதுவின் 'விசா'வை, உடனடியாக ரத்து செய்தது. அவரை, வங்கதேசத்துக்கு திரும்பி செல்லுமாறு 'நோட்டீஸ்' அனுப்பியது.இந்நிலையில், வங்கதேசத்தை சேர்ந்த மற்றொரு நடிகரான, காஸி அப்துல் நுார் என்பவர், டம்டம் லோக்சபா தொகுதி, திரிணமுல், காங்., வேட்பாளர் சவுகதா ராய் என்பவருக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.காஸி அப்துல் நுாரின், 'விசா' காலம் காலாவதி ஆன நிலையில், அவர் சட்டவிரோதமாக இங்கு தங்கி இருப்பது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தில், குடியுரிமை துறை அதிகாரிகள், புகார் அளித்தனர்.இதையடுத்து, அவரை உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு, மத்திய உள்துறை அமைச்சகம், நேற்று உத்தரவிட்டது.

மன்னிப்பு கேட்ட நடிகர்தன்னை வெளியேற்றியது குறித்து, வங்கதேச நடிகர், பிர்தவுஸ் அகமது கூறியதாவது:அண்டை நாட்டுக்கு வந்து, தேர்தல் பிரசாரம் செய்தது தவறு தான். மேற்கு வங்க மக்களின் அன்பை கண்டு, உணர்ச்சிவசப்பட்டு, இந்த தவறை செய்துவிட்டேன். அதற்காக இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

மன்னிப்பு கேட்ட நடிகர்!தன்னை வெளியேற்றியது குறித்து, வங்கதேச நடிகர், பிர்தௌஸ் அகமது, செய்தியாளர்களிடம் கூறியதாவது:அண்டை நாட்டுக்கு வந்து, தேர்தல் பிரசாரம் செய்தது தவறு தான். மேற்க வங்க மக்களின் அன்பை கண்டு, உணர்ச்சிவசப்பட்டு, இந்த தவறை செய்துவிட்டேன். அதற்காக இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
19-ஏப்-201910:17:47 IST Report Abuse
Loganathan Kuttuva அகதிகளுக்கு வேண்டும் வசதிகளை செய்து கொடுப்பதால் திரிணாமுல் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஏப்-201908:47:10 IST Report Abuse
Srinivasan Kannaiya அவர்களால் ஏதாவது அதிசியம் நடந்து விடப்போகிறது என்றா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X