பதிவு செய்த நாள் :
விறுவிறுப்பு! 
 இரண்டாம் கட்ட தேர்தலில் ஓட்டுப் பதிவு...
ஓட்டு இயந்திரங்களில் கோளாறால் தகராறு

புதுடில்லி : லோக்சபாவுக்கு, நேற்று நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்ததால், விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு நடந்தது. மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் சிறிய அளவிலான வன்முறை சம்பவங்கள் நடந்தன. ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், பல மாநிலங்களில், வாக்காளர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

 இரண்டாம் கட்ட தேர்தல், ஓட்டுப் பதிவு, விறுவிறுப்பு, ஓட்டு இயந்திரங்கள், கோளாறு, தகராறு

லோக்சபா தேர்தல், ஏப்., 11ல் துவங்கி, மே, 19 வரை, ஏழு கட்டங்களாக நடக்கிறது. ஆந்திரா உள்ளிட்ட, 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள, 91 லோக்சபா தொகுதி களுக்கு, ஏப்., 11ல், முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது.

உற்சாகம்



இந்நிலையில், தமிழகத்தில் - 38, கர்நாடகாவில் - 14, மஹாராஷ்டிராவில் - 10, உத்தர பிரதேசத்தில் - எட்டு, அசாம், பீஹார், ஒடிசா ஆகிய மாநிலங்களில், தலா, ஐந்து, சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில், தலா, மூன்று, ஜம்மு - காஷ்மீரில் இரண்டு தொகுதிகளுக்கு, நேற்று தேர்தல் நடந்தது.

மேலும், வட கிழக்கு மாநிலமான, மணிப்பூர், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், தலா, ஒரு தொகுதிக்கும், நேற்று தேர்தல் நடந்தது.

இதில், நாடு முழுவதும், 15.8 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். திட்டமிட்ட படி, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், காலை, 7:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது. பெரும்பாலான மாநிலங்களில், வாக்காளர்கள், ஆர்வத்துடன் ஓட்டளித்தனர். கடும் வெயிலையும் பொருட் படுத்தாமல், இளைய தலைமுறை வாக்காளர்கள், உற்சாகத்துடன் வந்து,ஓட்டளித்தனர்.

வெப்பத்திலிருந்து, வாக்காளர்களை பாதுகாப்பதற் காக, பெரும்பாலான ஓட்டுச் சாவடிகளில், 'ஷாமியானா' பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மேற்கு வங்க மாநிலத்தில், பல இடங்களில் வன்முறை வெடித்தது. ராய்கஞ்ச் தொகுதியில், மார்க்சிஸ்ட் வேட்பாளர் மீது, ஆளும் கட்சியினர் தாக்குதல் நடத்தியதால், பதற்றம் நிலவியது. டார்ஜிலிங் தொகுதியிலும் வன்முறை வெடித்தது. கலவரக்காரர்களை கலைக்க, போலீசார் தடியடி நடத்தினர்; கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். சத்தீஸ்கரிலும், நக்சலைட்டுகள் குண்டு வெடிப்பு களை நிகழ்த்தினர். இதில், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஜம்மு - காஷ்மீரில், ஸ்ரீநகர் லோக்சபா தொகுதிக்கு, நேற்று தேர்தல் நடந்ததை அடுத்து, அங்கு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அமைதி



பீஹாரில், பல ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், வாக்காளர்கள், போராட்டத்தில் இறங்கினர். இதனால், ஓட்டுப் பதிவில் தாமதம் ஏற்பட்டது. உத்தர பிரதேசம், ஒடிசா, அசாம் மாநிலங்களிலும், ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், சச்சரவு எழுந்தது. பெரும்பாலான இடங்களில், ஓட்டுப் பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.3ம் கட்டதேர்தல், 116 தொகுதிகளுக்கு,

Advertisement

வரும், 23ல் நடக்கிறது. தேர்தலில் பதிவான ஓட்டுகள், அடுத்த மாதம், 23ல் எண்ணப்பட்டு, அன்று மாலை, முடிவுகள் அறிவிக்கப்படும்.

முக்கிய அம்சங்கள்


*நாடு முழுவதும், 11 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள, 95 லோக்சபா தொகுதிகளுக்கு, நேற்று தேர்தல் நடந்தது
* இந்த தேர்தலில், 15.8 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர்
* இதற்காக, நாடு முழுவதும், 1.81 லட்சம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன
* அதிகபட்சமாக, தமிழகத்தில், 38 தொகுதி களுக்கு தேர்தல் நடந்தது
* வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப் பட்டிருந்த பணம் பிடிபட்டதால், தமிழகத்தின் வேலுாரில், தேர்தல் ரத்து செய்யப்பட்டது
* திரிபுரா கிழக்கு தொகுதியில், நேற்று நடக்க விருந்த தேர்தல், வன்முறை காரணமாக, வரும், 23க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
19-ஏப்-201909:15:28 IST Report Abuse

s t rajanஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல்வாதிகள் வாக்களிப்பதை தாண்டி.. ஆண் -பெண் நடிகர்கள் வாக்களிப்பதை தான் ஊடகங்கள் காண்பிக்கின்றன தமிழக அம்பானிகள்..அதாவது தமிழக பெரு முதலாளிகள் யாரெல்லாம் வரிசையில் நின்று வாக்களித்தார்கள் ? என்று காண்பிக்கலாம். தமிழக விளையாட்டு வீரர்கள் யாரெல்லாம் வரிசையில் நின்று வாக்களித்தார்கள் ? என்று காண்பிக்கலாம். தமிழக விஞ்ஞானிகள் யாரெல்லாம் வரிசையில் நின்று வாக்களித்தார்கள் என்று காண்பிக்கலாம். இதற்காகவே வெளிநாட்டிலிருந்து வந்து வாக்களிக்கும் மனிதர்களை காண்பிக்கலாம். அறிவாலும், திறமையாலும் சாதித்த எத்தனையோ மனிதர்கள் பல துறைகளிலும் இருக்கிறார்கள் . அவர்களையெல்லாம் காண்பிப்பதன் மூலம்தான்..வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு எளிதாக உணர்த்த முடியும். நடிகர்களையும், அரசியல்வாதிகளையும் மட்டுமே காண்பித்துக் கொண்டிருந்தால்.. ஏதோ ஜனரஞ்சகமான பேய் படம் பார்ப்பதை போன்ற எண்ணம் தான் வரும்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஏப்-201908:29:03 IST Report Abuse

Srinivasan Kannaiyaவாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்ததால், விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு நடந்தது. ஆனால் எங்கேயும் எண்பது சதத்தை தாண்ட வில்லையே

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X