அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மாநிலம் , தேர்தல் திருவிழா, கோலாகலம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்று, தேர்தல் திருவிழா, கோலாகலமாக நடந்து முடிந்தது. இதேபோல், மதுரையில், மீனாட்சி தேரோட்டமும், பக்தர்கள் வடம் பிடிக்க, ஜோராக நடந்தது. ஆம்பூர் மற்றும் அரியலுாரில், இரு தரப்பினர் இடையே மோதல் உட்பட, சில சம்பவங்களை தவிர, மாநிலம் முழுதும், ஓட்டுப்பதிவு அமைதியாக முடிந்தது. நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில், 71 சதவீதம், புதுச்சேரியில், 80 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாகதெரிய வந்துள்ளது.தமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும்; புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதிக்கும், ஒரு சட்டசபை தொகுதிக்கும், நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.வேலுார் லோக்சபா தொகுதிக்கு, தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், அங்கு மட்டும் ஓட்டுப்பதிவு நடக்கவில்லை.

'விவிபேட்'


மீதமுள்ள தொகுதிகளில், காலை, 7:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு துவங்கியது. காலை, 6:00 மணியிலிருந்து, ஓட்டளிப்பதற்காக, வாக்காளர்கள், ஓட்டுச்சாவடிக்கு வரத் துவங்கினர். அனைவரும் ஆர்வமுடன், நீண்டவரிசையில் நின்று,ஓட்டளித்தனர்.இம்முறை, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர்கள், எந்தசின்னத்திற்கு ஓட்டளித்தனரோ, அதை, அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், 'விவிபேட்' எனும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக, ஒவ்வொரு வாக்காளரும் ஓட்டளிக்க, கூடுதலாக, ஒரு நிமிடமானது. இளைஞர்கள், இளம்பெண்கள், முதியோர் என, அனைத்து தரப்பினரும், வெயிலையும் பொருட்படுத்தாமல், பொறுமையாக வரிசையில் நின்று, ஓட்டளித்தனர்.
ஒருசில இடங்களில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், பழுது ஏற்பட்டதாக, புகார் எழுந்தது. அங்கு, மாற்று ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டு, சற்று தாமதமாக,

ஓட்டுப்பதிவு துவங்கியது.தேர்தல் திருவிழா கோலாகலத்திற்கு இடையில், மதுரையில் நேற்று, சித்திரை திருவிழாவின் முக்கிய அங்கமான, தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. இங்கு தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என, பல தரப்பினரும் விடுத்த கோரிக்கையை, தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

சிறப்பு அனுமதி


ஆனால், மக்கள் தேரோட்டத்தில் பங்கேற்ற பின், ஓட்டளிப்பதற்குவசதியாக, அங்கு மட்டும்,காலை, 7:00 மணியிலிருந்து, இரவு, 8:00 மணி வரை ஓட்டளிக்க, தேர்தல்ஆணையம் சிறப்புஅனுமதி வழங்கியது.இதனால், மீனாட்சி தேரோட்டத்தில் பங்கேற்ற மக்கள், ஓட்டுப்பதிவிலும் பங்கேற்று, ஜனநாயக கடமையை செய்தனர்.
மாநிலத்தில் பெரிய அளவில், அசம்பாவிதங்கள் எதுவும்நடக்கவில்லை. வேலுார் தொடர்ச்சி 4ம் பக்கம்மாவட்டம், ஆம்பூரில், அ.ம.மு.க.,வினருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், அ.ம.மு.க., வேட்பாளர் பாலசுப்ரமணியன் கார் சேதப்படுத்தப்பட்டது.

போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.அரியலுார் மாவட்டத்தில், சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட, பொன்பரப்பிகிராமத்தில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், 20 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. வேலுார் மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் கிராமத்தில், ஓட்டுப்பதிவு நிறைவடைய இருந்தபோது, பொது மக்கள் அதிகம் திரண்டனர். அதைத் தொடர்ந்து, போலீசார் வானத்தை நோக்கி சுட்டதால், பதற்றம் ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், வீரவநல்லுார் பகுதியில், அ.ம.மு.க., - பா.ஜ., தொண்டர்கள் இடையே, மோதல் ஏற்பட்டது. இதில், பா.ஜ.,வை சேர்ந்த, ஐந்து பேருக்கு, கத்திக்குத்து விழுந்தது. அவர்கள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இது தவிர, மற்ற பகுதிகளில், ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. காலை முதல், இரண்டு மணி நேரத்திற்கு ஓரு முறை, ஓட்டுப்பதிவு சதவீதத்தை, தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
காலை, 11:00 மணிக்கு, 30.62 சதவீதம்; மதியம், 1:00 மணி, 39.49; பிற்பகல், 3:00 மணி, 52.02; மாலை, 5:00 மணி, 63.73; ஓட்டுப்பதிவு முடிந்த, 6:00 மணிக்கு, 69.55 சதவீதமாக, ஓட்டுகள் பதிவானது. மாலை, 6:00 மணிக்கு மேல், ஓட்டு அளிப்பதற்காக வரிசையில் காத்து

இருந்தவர்களுக்கு, 'டோக்கன்' வழங்கப்பட்டு, அவர்கள் ஓட்டளிக்க ஏற்பாடுசெய்யப்பட்டது.
சட்டசபை இடைத்தேர்தல் நடக்கும், 18 தொகுதிகளில், 71.62 சதவீதம், ஓட்டுகள் பதிவாகி உள்ளன. புதுச்சேரியில், 80 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. இரவிலும் ஓட்டுப்பதிவு நடந்ததால், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'சீல்' வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன், ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பதிவான ஓட்டுகள், மே, 23ல் எண்ணப்படும்.

ஓட்டுப்பதிவு அதிகரிப்பு யாருக்கு ஆதாயம்?


தமிழகத்தில், 2014 லோக்சபா தேர்தலில், 73.68 சதவீதம் ஓட்டுகள்பதிவாகின. இம்முறையும் ஓட்டுப்பதிவு, 75 சதவீதத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரியான ஓட்டுப்பதிவு சதவீதம் விபரம், இன்று தான் தெரிய வரும்.
வழக்கம் போல், சென்னையில், குறைவான ஓட்டுகளே பதிவாகி உள்ளன.தேர்தல் பிரசாரத்தின்போது, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி இடையே, கடும் போட்டி நிலவியது. அ.ம.மு.க., - நாம் தமிழர் கட்சி - மக்கள் நீதி மையம் ஆகியவையும், இம்முறை ஓட்டுகளை பிரிக்கின்றன. இக்கட்சி வேட்பாளர்கள் பெறும் ஓட்டுகள், யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. எனவே, அதிக ஓட்டுப்பதிவு, யாருக்கு ஆதாயம் என்பதை அறிந்து கொள்ள முடியாமல், அரசியல் கட்சியினர் தவித்து வருகின்றனர்.
முந்தைய லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதம்ஆண்டு / ஓட்டுப்பதிவு சதவீதம்1952 - 57.891957 - 47.711962 - 68.771967 - 76.591971 - 71.831977 - 66.761980 - 66.761984 - 73.091989 - 66.871991 - 63.921996 - 66.941998 - 57.951999 - 57.982004 - 60.812009 - 72.982014 - 73.682019 - 69.55 (மாலை, 6:00 மணி நிலவரம்) - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
19-ஏப்-201913:10:07 IST Report Abuse

இந்தியன் kumarகடுமையான வெயில் இருந்த போதும் இந்த அளவு வாக்கு சதவிகிதம் வந்தது மாபெரும் சாதனை.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
19-ஏப்-201912:52:14 IST Report Abuse

oceதேர்தல் முடிவும் சுமுகம் தான் கவலை வேண்டாம்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஏப்-201908:27:11 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎல்லாமே சுமூகம... தேர்தல் முடிவு...?

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X