பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஆதரவு
காங்., வேட்பாளருக்கு முகேஷ் அம்பானி
மறுப்பாரா கட்சி தலைவர் ராகுல்

மும்பை: தெற்கு மும்பை லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மிலிந்த் தியோராவுக்கு, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, கோட்டக் மகிந்திரா வங்கி தலைவர் உதய் கோட்டக் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 காங்., வேட்பாளர், முகேஷ் அம்பானி, ஆதரவு, காங், காங்கிரஸ் ராகுல்

'ரபேல் போர் விமானங்கள் கொள்முதலில் அம்பானிக்கு ஆதரவாக செயல்பட்டு மக்கள் பணத்தை பிரதமர் மோடி திருடிவிட்டார்' என பேசி வரும் காங். தலைவர் ராகுல் இதை ஏற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள தெற்கு மும்பை லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்

மிலிந்த் தியோரா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சிவசேனாவைச் சேர்ந்த இத்தொகுதி எம்.பி. அரவிந்த் சாவந்த் போட்டியிடுகிறார். இந்நிலையில் மிலிந்த் தியோரா 'டுவிட்டரில்' ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் முகேஷ் அம்பானி '' தெற்கு மும்பைக்கு ஏற்றவர் மிலிந்த் தியோரா. அவர் 10 ஆண்டுகளாக இத்தொகுதியின் பிரதிநிதியாக பணியாற்றி சமூக பொருளாதார கலாசார முன்னேற்றத்திற்கு பாடு பட்டு உள்ளார்'' என தெரிவித்துள்ளார்.உதய் கோட்டக் ''மிலிந்த் தியோரா மற்றும் அவர் குடும் பத்திற்கும் மும்பைக்கும் நீண்ட காலம் தொடர்பு உள்ளது. அவர் மும்பையின் உண்மையான பிரதிநிதி'' என கூறியுள்ளார்.

இதையடுத்து மிலிந்து தியோராவெளியிட்டுள்ள செய்தியில் ''கடந்த ஐந்து ஆண்டுகளாக மும்பை நகர தொழில் மற்றும் வர்த்தக பிரிதிநிதிகளின் குரல் லோக்சபாவில் ஒலிக்கவில்லை.


இதையொட்டி என்னை தேர்வு செய்வதற்கு ஆதரவு தெரிவித்துள்ள முகேஷ் அம்பானி உதய்கோட்டக் ஆகியோருக்கு என் நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தை முகேஷ் சகோதரர் அனில் அம்பானிக்கு பிரதமர் மோடி முறைகேடாக அளித்ததாக காங். தலைவர் ராகுல் குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் முகேஷ் அம்பானி காங். வேட்பாளர் மிலிந்த் தியோராவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


'அம்பானியின் ஆதரவு எங்கள் வேட்பாளருக்கு வேண்டாம்' என ராகுல் அறிவிப்பாரா அல்லது அமைதியாக இருந்து விடுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
20-ஏப்-201916:09:18 IST Report Abuse

madhavan rajanமுப்பதாயிரம் கோடியை அம்பானியின் பாக்கெட்டில் மோடி போட்டுவிட்டார். அதை ராகுல் பிளேடு போட்டு எடுத்துவிட்டார். நாங்க யாரு? கார்ப்பொரேட் திருடன்கிட்டயே கைவரிசை காட்டுறவுங்களாச்சே.

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
19-ஏப்-201921:51:48 IST Report Abuse

mindum vasanthamஇவர் பெட்ரோலியம் துறை அமைச்சராக இருந்த பொது தான் வளம் பெற்றார்

Rate this:
Raja Ramesh D - villupuram,இந்தியா
19-ஏப்-201920:43:14 IST Report Abuse

Raja Ramesh DHis father Murli Deora the Congress stalwart from Maharashtra, was a Gandhi family loyalist who had friends across political and corporate spectrum. The 77-year-old Mr. Deora was India’s longest serving Petroleum Minister

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X