அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தேர்தல் அமைதியாக முடிந்தது:
சத்யபிரதா சாஹு மகிழ்ச்சி

சென்னை: ''தமிழகத்தில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் இல்லாமல் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு முடிந்தது'' என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

தேர்தல் , சத்யபிரதா சாஹு, மகிழ்ச்சி



அவரது பேட்டி: தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இரவு 7:00 மணி நிலவரப்படி லோக்சபா தொகுதிகளில் 69.55 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக நாமக்கல்லில் 78 சதவீதம் சிதம்பரத்தில் 76.03 சதவீதம் ஓட்டுகள்

பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 57.05 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. சட்ட சபை இடைத்தேர்தலில் 71.62 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. அதிகபட்ச மாக அரூரில் 86.96 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. குறைந்தபட்ச மாக சாத்துாரில் 60.87 ஓட்டுகள் பதிவாகி உள்ளது.

ஓட்டுப்பதிவு முடிந்த நேரத்தில் கீழ் விஷாரம் கிராமத்தில் துணை ராணுவ வீரர் கூட்டத்தை கலைப்பதற்காக ஒரு ரவுண்ட் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை எதுவும் இல்லை.

இரண்டு மூன்று இடங்களில் தேர்தல் புறக்கணிப் நடந்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை 45 மையங்களில் நடக்கும். அங்கு ஓட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.அப்பகுதியில் துணை ராணுவ வீரர் கள் மாநில போலீசார் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். கண்காணிப்பு

Advertisement

கேமரா பொருத்தப்பட்டு அப்பகுதி முழுவதும் கண்காணிக்கப்படும்.குமரி மாவட்டத்தில் 1 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் தெரிவிக்கப் பட்டு உள்ளது.


ஆனால் எந்தப் பகுதி என்று குறிப்பிட்டு மனு தரவில்லை. அவர்கள் அளித்த புகார் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும். இவ்வாறு கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Chennai,இந்தியா
19-ஏப்-201921:46:28 IST Report Abuse

Ramஏன் இன்னும் 80 சதவிகிதம் கூட வரவில்லை எவ்வளவு விளம்பர படுத்தியும் 71 % மேல வரல்லியே. மிச்சம் 29 % பேரோட நாட்டுரிமையை ரத்து செய்தால் தான் என்ன.....?அல்லது தேர்தல் ஆணையம் விட்டுப்போன அவ்வளவு பேருக்கும் விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்தால் என்ன? வருமான வரி துறை செய்வதைப்போல....

Rate this:
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
19-ஏப்-201914:14:28 IST Report Abuse

அசோக்ராஜ் பின்னே இருக்காதா? வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்து இருக்கும் பாக்யம் எல்லாருக்கும் கிடைக்குமா?

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஏப்-201908:34:36 IST Report Abuse

Srinivasan Kannaiyaமக்களுக்கும் மகிழ்ச்சி

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X