அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அமைச்சர் பதவிக்கு தகுதியற்ற சிதம்பரம்
வருமானவரி அதிகாரி ஸ்ரீவத்சவா காட்டம்

காரைக்குடி: ''அமைச்சர் பதவிக்கு சிதம்பரம் தகுதியற்றவர்,'' என வருமான வரித்துறை அதிகாரி சஞ்சய் ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.

அமைச்சர் பதவி, சிதம்பரம் , வருமானவரி அதிகாரி, ஸ்ரீவத்சவா, காட்டம்

உ.பி., நொய்டாவில் பணிபுரியும் வருமான வரித்துறை அதிகாரி சஞ்சய் ஸ்ரீவத்சவா, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அவர் கூறியதாவது:சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அவரது அலுவலக அதிகாரியாக இருந்தேன். அவர் அமைச்சராக இருக்க தகுதியற்றவர்.1996ல் நிதி அமைச்சர் ஆனார். பல்வேறு துறைகளில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியவர் சிதம்பரம். 1997ல் வெள்ளிப் பொருட்கள் சார்ந்த

ஏற்றுமதியில் அரசுக்கு 15 ஆயிரம் கோடி வருமானம் வரவேண்டிய நிலையில் 11 ஆயிரம் கோடி வருமானம் மட்டுமே அரசுக்கு கிடைத்தது. 4,000 கோடி இழப்பை அரசுக்கு ஏற்படுத்தினார். இது அவர் செய்த முதல் குற்றம்.

அதற்காக அவர் செய்த வேலைகளை சாதாரண மனிதனால் புரிந்து கொள்ள முடியாது. கணக்கு தணிக்கை (ஆடிட்டர்) படித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். 2004ல் அமைச்சரானது முதல் ஏர்செல் மேக்சிஸ், '2 ஜி' அலைக்கற்றை, ஏர்இந்தியா போன்றவற்றிலும் இதே போன்ற நிலைப்பாட்டை இவர் தொடரவே அரசை நடத்தவே பணம் இல்லாத சூழ்நிலை வந்தது.


இதனால் தேவையான வருமானத்தை மக்களிடம் இருந்து பெற அரசு முயற்சித்தது.இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டனர்.தனக்கு எதிராக வரும் வழக்குகளில் வழக்கறிஞர் கள் ஆஜராகாமல் தடுத்து வருகிறார்.


என்.டி.டி.வி., நிறுவனம் சட்ட விரோதமாக கொண்டு வந்த பணத்தை நான் தடுத்து நிறுத்த முயன்றேன். சிதம்பரம் துாண்டுதலின்படி என் மீது பாலியல் உட்பட ஆறு வழக்குகள் தொடரப்பட்டன. மனநலம் பாதிக்கப்பட்டவர் என குற்றம்சுமத்தினர்.

Advertisement

மூன்று வழக்குகளில் நான் குற்றவாளி இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட 'ஓபியம்' என்ற போதைப்பொருள் இந்தியாவிற்குள் கொண்டு வர சிதம்பரம் 1,500 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார். நான் வெளியிட்ட 'என்டிடிவி பிராடு' என்ற புத்தகத்தில் இதை குறிப்பிட்டுள்ளேன்.இவ்வாறு கூறினார்.

அவர் பேட்டி கொடுத்த போது டி.எஸ்.பி., அருண், 'தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் பேட்டி கொடுக்கக் கூடாது' என தடுத்தார். இதையடுத்து பேட்டியை முடித்தார்.


Advertisement

வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Sundaramurthy - Chennai,இந்தியா
25-ஏப்-201907:05:05 IST Report Abuse

P Sundaramurthyமஹாத்மா சொல்லிவிட்டார் எல்லோரும் சூரியநமஸ்காரம் பண்ணுங்கோ . இத்தனைநாள் எங்கையா இருந்திங்க சனி கிரகத்திலா? அடிக்கிற கூத்தை அடித்துவிட்டு இப்போ குய்யோ முறையோ சப்தம் .

Rate this:
karutthu - nainital,இந்தியா
23-ஏப்-201918:31:30 IST Report Abuse

karutthuஇந்த ஆளு லச்சனம் எல்லாருக்கும் தெரியும் .இதை ராகுல் காந்தியிடம் நன்றாக புரியும்படி சொல்லுங்கள் .இவன் இவன் பிள்ளை மனைவி எல்லாமே பிராடுகள் தான், சாராத சீட் பண்ட்ஸ் ல் அடித்த கொள்ளைகள் ஏராளம் .இந்த கும்பலை உச்ச நீதிமன்றம் வேறு ஜாமீன் கொடுத்து கேஸ் ஐ இழுத்தடிக்கறது .இவனுக்கு கிடைக்கிற சலுகை ஒரு சாதாரணமான மக்களுக்கு கிடைக்குமா ???

Rate this:
Ramamoorthy P - Chennai,இந்தியா
23-ஏப்-201913:01:01 IST Report Abuse

Ramamoorthy Pப சி யின் இந்த பணப்பசி இப்போது உச்சத்தில் இருக்கிறது அவருக்கு உடனடியாக பதவி வேண்டும். மக்கள் ஏமாளியானால் இவர் தான் மீண்டும் நிதியமைச்சர்

Rate this:
மேலும் 64 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X