அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு செய்த பிறகு கதறி அழுத ஏ.சி.சண்முகம்

Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (17)
Advertisement
ஓட்டுப்பதிவு செய்த பிறகு  கதறி அழுத ஏ.சி.சண்முகம்

ஆரணி, ஆரணியில் ஓட்டுப்பதிவு செய்த பிறகு கதறி அழுத புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை அவரது ஆதரவாளர்கள் சமாதானப்படுத்தினர்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் ஜெயின் தெருவில் உள்ள ஆதிபகவான் நர்சரி பிரைமரி பள்ளியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தன் ஓட்டை நேற்று காலை பதிவு செய்தார்.பின் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளிக்க முயன்றார். அப்போது திடீரென கண் கலங்கினார். அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருந்து தனியாக விலகிச்சென்று கதறி அழுதார். பின் அவரை உடனிருந்த அவரது ஆதரவாளர்கள் ஆறுதல் கூறி அழுவதை கட்டுப்படுத்தினர்.பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியா முழுவதும் நடக்கும் லோக்சபா தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்கும் நேரத்தில் வேலுார் தொகுதி மக்கள் வாக்களிக்கவில்லை. விரைவிலே இந்த தேர்தல் வரும். தேர்தல் கமிஷன் நிச்சயமாக அறிவிக்கும். டில்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க உள்ளோம். மே 19ல் நடக்க உள்ள நான்கு சட்டசபை இடைத்தேர்தலின்போது இந்த தேர்தலையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்த உள்ளோம். தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும் என அன்பு கட்டளையாக வைக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
22-ஏப்-201910:49:33 IST Report Abuse
இந்தியன் kumar தேர்தல் கமிஷன் நிறைய மாறுதலுக்கு உட்படனும் தவறு செய்தவர்கள் மட்டும் தண்டிக்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
22-ஏப்-201906:11:13 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> என்னாதுக்குபலகோடிகள் செலவு செய்து தேர்தல்லே நிக்குறானுக எல்லாரும் ஏமாளி ஜனம் துட்டுவாங்கினு ஈ ன்னு வோட்டுப்போட்டும்னா அன்று படிக்காதவ அதிகம் காந்தி நேரு ன்னுசொல்லி வோட்டுக்கேட்டானுக இன்று நிறையபேர் படிச்சுருக்கா இந்தியாலே கிராமம்ங்களிலேலேயும் கூட இளைய சமுதாயம் படிச்சுருக்குங்க விவரமாவு இருக்காங்க இந்த பீடை டாஸ்மாக் இல்லேன்னா தமிழ்நாடு ஆஹா ஓஹோ ன்னு பிரகாசிக்கும் இது 100% உண்மை ஆனால் திமுக அண்ட் அதிமுக கொடிலேபோராளமுடியாதே ஆதாம் இழவு டாஸ்மாக் கட்டிண்டு ஒப்பாரிவைச்சு (டார்கெட்வச்சு) காசுபாக்குறானுக கொண்டாந்தவனும் பூமிக்குள்ளே போயாச்சு டாஸ்மாக் என்று பெருவாச்சு அழகுபார்த்தவளும் பூமிக்கடியேபோயிட்டா ரெண்டும் சேர்த்தது பலகோடி நேத்திக்காசும் இல்லாமல் போய் சொந்தங்களே ஜெயாவின் காசு சசி அண்ட் கூட்டம் கொள்ளை அடிச்சுட்டாங்க முகவிற்கு பலமனைவிகள் பிள்ளைகுட்டிகள் ஏராளம் உறவுகளும் சேர்ந்து பிரிச்சுண்டாச்சு கட்சியும் காசும் ஸ்தாலினுக்கும் கனிமொழிக்கும் போல நேர்மையின் மொத்தஇலக்கணம் தான் இதுகள் , தினகரனு ஓட்டும் இல்லே உறவுமில்லே ஜெயம் (வெரைட்டி அடிக்கப்பட்டவன் ) எல்லாம் சுரண்டிட்டு கட்சியும் ஆரம்பிச்சுட்டான் முதல்ல சசியின் துணை இப்போது தானே எல்லாம் னு சொல்லுன்னு அதிமுக அண்ட் திமுகவையே முழுங்கிடுவான்போல , இந்தாளு சி எம் ஆனால் அவ்ளோதான் தமிழா உங்கள்வாயிலே நிஸ்ச்சயம் மன்னுதான் ஒலோபெரிய கில்லாடி இவன் ஜாக்கிரதையா இருங்க எவனை நம்பினாலும் இந்த பன்னியை நபாவேகூடாது
Rate this:
Share this comment
Cancel
PR Makudeswaran - Madras,இந்தியா
21-ஏப்-201921:30:40 IST Report Abuse
PR Makudeswaran எ.சி ஷண்முகம் சரி. இந்தியாவில் நல்ல நேர்மையான அரசியல்வாதி முன்னரும் இல்லை இப்பொழுதும் இல்லை இந்த செட்டப்பில் வரப்போவதும் இல்லை திருட்டு அரசியல் உருப்படவிடமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Ramamoorthy P - Chennai,இந்தியா
22-ஏப்-201912:40:36 IST Report Abuse
Ramamoorthy Pஏசி அறையில் இருந்தவர மீண்டும் ஒரு முறை வெயிலில் அலைய நேரிட்டால் கதராமல் என்ன செய்வார் ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X