பதிவு செய்த நாள் :
'காங்கிரசுக்கு ஓட்டளித்தால்
விவசாயிகளுக்கு நிம்மதி'

லக்னோ:''காங்கிரசுக்கு ஓட்டளித்தால் விவசாய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். விவசாயிகள் சிறைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை'' என அந்த கட்சி தலைவர் ராகுல் பேசினார்.

காங்கிரஸ் , விவசாயி, நிம்மதி, ராகுல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் லோக்சபா தேர்தலுக்காக நாடு முழுவம் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று உ.பி., குஜராத் மாநிலங்களில் நடந்த பிரசார கூட்டங்களில் காங். வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:

நம் நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் பலர்

வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்று அவற்றை திரும்பச் செலுத்தாமல் வெளிநாடு களுக்கு தப்பி ஓடி விட்டனர். அவர்கள் தப்புவதற்கு மத்திய அரசே உதவியது.ஆனால் விவசாயத்துக் காக சில ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய விவசாயிகளை எல்லாம் மத்திய அரசு சிறைக்கு அனுப்புகிறது.காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும். விவசாயிகள் சிறைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

சமாஜ்வாதி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் பா.ஜ.வையும் மத்திய அரசையும் அதிகம் விமர்சிக்க மாட்டார்கள். அவர்களது பிடி மோடியின் கையில் உள்ளது தான் இதற்கு காரணம். கடந்த 45 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் தான் வேலை வாய்ப்பின்மைஅதிகரித்துள்ளது.

பணமதிப்பிழப்பு திட்டத்தை அமல்படுத்தி சாதாரண மக்களின் பணத்தை எல்லாம் மோடி எடுத்துச் சென்று விட்டார். மத்தியில் காங். ஆட்சி அமைந்ததும் ஏழை குடும்பத்தினருக்கு ஆண்டு தோறும் 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.காங்.

Advertisement

ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அப்போது விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படும்.

'நாட்டுக்கு இரண்டுபிரதமர்கள் தேவை' என நாங்கள் கூறியதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். நமக்கு ஒரே தேசியக் கொடி தான். அப்படி என்றால் நாடும் ஒரே நாடு தானே. தேவையில்லாமல் பா.ஜ. வினர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.இவ்வாறு பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amreen - Utah,யூ.எஸ்.ஏ
19-ஏப்-201919:14:20 IST Report Abuse

Amreenஇந்த கடன் தள்ளுபடியால் சில ஊழல் சூட்சிகள் உள்ளது ஒன்று, 10 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யும் விவசாயிகள் தான் வங்கிக்கு கடன் வாங்க செல்ல முடியும் இரண்டு ஊழல் தள்ளுபடியில் பல தில்லு முல்லுகள் உள்ளது. இது கட்சிக்கும் சில அரசியல்வாதிகளுக்கும் பணம் திருப்பி விட படுகிறது. இது தெரியாத அப்பாவி விவசாயி இருக்கிற கோவணத்தையும் இழந்ததுதான் மிச்சம்.

Rate this:
bal - chennai,இந்தியா
19-ஏப்-201918:53:42 IST Report Abuse

balதிருட்டு பசங்க.பொய் பேசுவதில் வல்லவர்கள்...பத்து நாட்களில் கடன் தள்ளுபடி நடந்ததா மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டிஸ்கரில்

Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
19-ஏப்-201917:07:15 IST Report Abuse

sankarவிவசாயி எல்லோருக்கும் நிம்மதி அப்படியே படுத்துறங்க ராவுல் வந்து வாயில கஞ்சி ஊத்துவாரு

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X