அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுக்கு பணம் கொடுக்க விருப்பம் இல்லை: தினகரன்

Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (14)
Advertisement
ஓட்டுக்கு பணம் கொடுக்க விருப்பம் இல்லை: தினகரன்

சென்னை, ''எங்கள் வேட்பாளர்கள் வசதியானவர்கள்; ஆனால், பணம் கொடுக்க விரும்பவில்லை,'' என, அ.ம.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:ஆளும்கட்சிக்கு, 40 சதவீதத்திற்கு மேல், ஓட்டு வங்கி இருப்பதாக இருந்தால், இடைத்தேர்தலில், 2,000 ரூபாய், லோக்சபா தேர்தலில், 500 ரூபாய், அவர்கள் ஏன் வழங்கினர்.தமிழகத்தை, பா.ஜ., அழிக்க பார்க்கிறது. அதற்கு எடுபிடியாக உள்ள, பழனிச்சாமி அரசு, ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை அனுமதிக்கிறார்.'காவிரி ஆணையம் அமைக்க முடியாது' என, காங்கிரஸ், கர்நாடகாவில், பிரசாரம் செய்கிறது. மக்கள் அனைத்தையும் கவனித்து கொண்டிருக்கின்றனர். 'இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவேன்' என கூறி, மோடி ஏமாற்றியதால், கொதித்து போய் உள்ளனர்.மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். எங்கள் மீது, நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தின் உரிமைகளை, அ.ம.மு.க.,வால் தான் மீட்டெடுக்க முடியும் என்று, மக்கள் நம்புகின்றனர். தேனியில், அ.தி.மு.க., பிரமுகரின் வீட்டில் பணத்தை கைப்பற்றி விட்டு, எங்கள் மீது பழி சுமத்துகின்றனர்.அ.தி.மு.க., கட்டடத்தில், எங்கள் கட்சிக்காரர், எப்படி பணம் கொடுப்பார்; அ.தி.மு.க.,வினர் பணத்தை காப்பாற்ற, காவல் துறை, எங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மே, 23 தீர்ப்பு, பலருடைய முகத்திரையை கிழிக்கும்.அ.தி.மு.க., சார்பில், 18 தொகுதிகளில், ஓட்டுக்கு, 2,000 ரூபாய் கொடுத்துள்ளனர். வேலுார் தொகுதி தேர்தலை ரத்து செய்தது சரி. அதையும் மீறி, ஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளில், பணம் கொடுத்துள்ளனர். துாத்துக்குடியில், தி.மு.க., சார்பில், ஓட்டுக்கு, 500 ரூபாய் கொடுத்துள்ளனர்.நாங்கள் நினைத்தால், பணம் கொடுக்க முடியும்; ஆனால், விரும்பவில்லை. எங்கள் வேட்பாளர்கள், வசதியானவர்கள். ஆனாலும், 'ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டாம்' என, கூறி விட்டேன். தேர்தல் ஆணையம், ஆளும் கட்சியின், கைப்பாவையாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
19-ஏப்-201921:43:52 IST Report Abuse
mindum vasantham சூப்பரப்பு ... ஆஹா! "அடங்கப்பா இது உலக மகா நடிப்புடா சாமி" கவுண்டமணியின் காமெடி நினைவிற்கு வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
19-ஏப்-201920:59:37 IST Report Abuse
Poongavoor Raghupathy Dinakaran does not have money to give because he has exhausted his money in R.K.Nagar only and he is managing the ADMK deserted18 MLAs also. Sasikala has identified the wastages and tightened money supply to Dinakaran. Dinakaran could not give and he will not be able to get a single seat of MP or MLA also. Poor Dinakaran who aspired for C.M of Tamilnadu is now in a position to satisfy with his MLA seat only. KEDUVAN KEDU NINAIPPAN is now proved in Dinakaran's case. Stalin and Dinakaran wanted Edappadi to get out of CM but the GOD is favoring him for completing his full term of 5 years. Edappadi is going strong strong because he worked hard for ADMK Party and Dinakaran was an intruder.
Rate this:
Share this comment
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
19-ஏப்-201918:26:55 IST Report Abuse
sankar அவரு என்னிக்குமே ஓட்டுக்கு டோக்கன் தான் கொடுப்பாரு . காசு கொடுக்க மாட்டாரு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X