பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
100 சதவீத பதிவு: பலூன் விட்டால் மட்டும் போதுமா?
பஸ், ரயில் இல்லாததால் வாக்காளர்கள் தவிப்பு

தமிழகத்தில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற இலக்கை நோக்கி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திய தேர்தல் ஆணையம், ஓட்டு போட சொந்த ஊர் சென்ற மக்களுக்கு, கூடுதல் ரயில், பஸ் வசதிகளை ஏற்படுத்தி தராதது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப் பட்ட நாளில் இருந்து, தமிழகத்தில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற இலக்கை நோக்கி, தேர்தல் ஆணையம், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது.

ரயில்வே மோசம்

இதற்காக, பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஆனால், பிழைப்புக்காக சென்னை வந்தவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்று, ஓட்டு போட ஆர்வம் காட்டியும், அவர்கள் ஊருக்கு செல்ல, போதிய பஸ், ரயில் வசதிகளை, அரசும், தேர்தல் ஆணையமும் ஏற்பாடு செய்து தராதது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஓட்டுப்பதிவு நடந்த நேற்று, அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் முதல், சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள், சொந்த ஊருக்கு புறப்பட்டனர். நேற்று முன்தினம் பணி நாள் என்பதால்,பணி நேரம் முடிந்த பின், அனைவரும் குடும்பத்துடன் புறப்பட்டனர். ஆனால், இந்த வாக்காளர்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக, சிறப்பு ரயில்களோ, வழக்கமான ரயில்களில், முன்பதிவு செய்யப்படாத, சாதாரண வகுப்பு பெட்டிகளை கூடுதலாக இணைக்கவோ, ரயில்வே நிர்வாகம், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக, வழக்கமாக இயக்கப்பட்ட ரயில்களை கூட, கால தாமதமாக இயக்கி, வாக்காளர்களின் வயிற்றெரிச்சலை கொட்டி கொண்டது. இதனால், எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், குடும்பத் துடன் காத்திருந்த பயணியர், ரயில்களில் இடம் கிடைக்காமல், ஓட்டு போடும் முடிவை கை விட்டு, வீட்டிற்கு திரும்பினர்.

பல ரயில்களில், முன்பதிவு பெட்டிகளில், சாதாரண டிக்கெட் எடுத்த பயணியர் ஏறி, பெட்டியை அடைத்துக் கொண்டதால், திட்ட மிட்டு முன்பதிவு செய்தவர்களால்,ர யிலில் ஏற முடியவில்லை.

போராட்டம்: ஒரு பெட்டியில், நுாற்றுக்கணக் கான பயணியர் ஏறிக் கொண்டதால், டிக்கெட்

பரிசோதகர், ரயில்வே போலீசார் ஆகியோரால், ஒன்றுமே செய்ய முடியவில்லை.இதனால் முன்பதிவு செய்தவர்களால் கூட, சொந்த ஊர் செல்ல முடியாமல், வீடு திரும்பினர்.சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு, தினமும், 2,965 விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தேர்தல் விடுமுறையை முன்னிட்டு, 1,509 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக, அரசு அறிவித்தது. ஆனால், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிமுதல், வெளியூர் செல்ல, பஸ்களே இல்லை. சிறப்பு பஸ்கள், போதிய அளவில் இயக்கப்பட்டதாக தெரியவில்லை.இதனால், கோயம் பேடு, தாம்பரம், பெருங்களத்துார் உள்ளிட்ட இடங்களில், பஸ்சுக்காக பயணியர் அலை மோதினர்.

நேற்றும், பஸ்கள் கிடைக்காததால், கோயம்பேடில் பயணியர் போராட்டம் நடத்தினர். ஒட்டுமொத்த மாக, ஆயிரக்கணக்கான வாக்காளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாததால், லோக்சபா தேர்தலுக்கு ஓட்டளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

'ராக்போர்ட்' ரயிலில் ரகளை!

தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இரவு, 11:00 மணிக்கு இயக்கப்படும், 'அந்தியோதயா' ரயிலில், கூட்ட நெருக்கடி இருந்ததால், பயணியர், ஏற முடியாமல் தவித்தனர். இதனால், அந்த ரயில், 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.எழும்பூரில் இருந்து, 11:30 மணிக்கு புறப்பட வேண்டிய, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில், கூட்ட நெரிசல் காரணமாக, 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.

முன்பதிவு செய்தவர்கள், ரயிலில் ஏற முடியாத தால், தாம்பரத்தில்,ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின், செயினை பிடித்து இழுத்து நிறுத்தி, பயணியர் ரகளையில் ஈடுபட்டனர். பின், நள்ளிரவு 1:15 மணி வரை, அந்த ரயில், தாம்பரத்தில் நிறுத் தப்பட்டது. திருச்சி செல்லும் கடைசி ரயில் இது என்பதால், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமின்றி, திருச்சிக்கு, சாதாரண வகுப்பில் பயணிக்க டிக்கெட் எடுத்தவர்களும், பயணத்தை ரத்து செய்து, வீடு திரும்பினர்.

விடிய விடிய நெரிசல்!

லோக்சபா தேர்தலுக்கு ஓட்டளிக்க, சொந்த ஊர் புறப்பட்ட பயணியரால், பஸ் நிலையங்கள், திருவிழா கூட்டமாக காணப்பட்டது. ஆம்னி பஸ்கள், விடிய விடிய இயக்கப்பட்டன. பண்டிகை நாட்களை விட, கூடுதல் கட்டண கொள்ளை அடிக்கப்பட்டது.


ஒரே நேரத்தில், ஆயிரக்கணக் கான வாகனங்கள் சென்னையை விட்டு வெளியேறியதால், தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில், இரும்புலியூரில் இருந்து, திருநீர்மலை வரை, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஜி.எஸ்.டி., சாலையில், பெருங்களத்துாரில் இருந்து பல்லாவரம் வரை, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Advertisementபோக்குவரத்தை கட்டுப்படுத்த, போலீசார் யாரும் இல்லாததால், விடிய விடிய இந்த வாகன நெரிசல் நீடித்தது. இதனால், ஆம்னி பஸ்கள், கார்கள் மூலம், சொந்த ஊர் செல்ல முயன்றவர்களும், திட்டமிட்டபடி செல்ல முடியாமல் தவித்தனர். பலர், பாதியில் பயண முடிவை கைவிட்டு, வீடு திரும்பினர்.
கழிப்பறையில்பயணம்!

தென் மாவட்டங்களுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி களில், ஒவ்வொரு கழிப்பறையிலும், 4 - 6 பேர் வரை பயணித்தனர். மாற்றுத்திறனாளிகளுக் கான பெட்டி, மகளிர் பெட்டி, முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில், இஷ்டத்திற்கு பயணியர் ஏறினர்.யாரையும் கட்டுப்படுத்த முடியாமல், ரயில்வே போலீசாரும், ரயில்வே அதிகாரிகளும், கைகட்டி வேடிக்கை பார்த்தனர்.

மின்சார ரயில்களும் ரத்து!

பராமரிப்பு பணி என்ற பெயரில், மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது தொடர்கிறது. ஓட்டுப்பதிவுக்காக, மக்கள் சொந்த ஊர் சென்ற நிலையில், நேற்று முன்தினமும், மின்சார ரயில்கள், ரத்து செய்யப்பட்டன. கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு, இரவு, 10:00 மணிக்கு பின், ரயில்கள் இயக்கப்படவில்லை.

தாம்பரத்தில் இருந்து, இரவு, 10:00 மணிக்கு பின், ஒரு மணிநேரத்திற்கு, ஒரு ரயில் இயக்கப் பட்டது. இதனால், பயணியர் கூட்டம் நிரம்பி வழிந்தது. 'கால் டாக்சி'களும் கிடைக்காமல், மக்கள் அவதிப்பட்டனர்.

மாநிலம் முழுவதும் சிக்கல்

தமிழகம் முழுவதும், அரசு பஸ்களின் சேவை, நேற்று, பாதிக்கும் மேல் முடங்கியதால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின், எட்டு கோட்டங்கள் சார்பில், 22 ஆயிரத்து, 533 பஸ்கள் இயக்கப்படுகின்றன.


தேர்தலில் ஓட்டளிக்க வசதியாக, அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள, பா.ஜ., - தே.மு.தி.க., உள்ளிட்ட சங்க உறுப்பினர்களுக்கு விடுப்பு அளிக்க, ஆளுங்கட்சி சார்பில், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இதனால், அவர்கள் விடுப்பு, மாற்றுப் பணி போர்வையில், ஓட்டு போட சென்று விட்டனர். தி.மு.க., கூட்டணியில் உள்ள சங்கங்களை சேர்ந்தவர்களுக்கு விடுப்பு, அனுமதி மறுக்கப் பட்டு, பணிக்கு வர உத்தரவிட்டும், அவர்கள் பெரிதாக வரவில்லை.இதனால், கிருஷ்ணகிரி, திருப்பூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், பாதிக்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்காததால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.தமிழகம் முழுவதும் இதே நிலைதான் இருந்தது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஏப்-201900:04:15 IST Report Abuse

ஆப்புதேர்தல் ஆணையமே ஓட்டுப் போட்டா ₹500 குடுப்போம்னு சொல்லணும்.

Rate this:
19-ஏப்-201921:08:55 IST Report Abuse

ஆப்புபியூஸ் போன கோயலுக்கு சொல்லுங்க. ரயில் மந்திரி ரொம்ப சந்தோஷப்படுவாரு..

Rate this:
thiru - Chennai,இந்தியா
19-ஏப்-201920:34:29 IST Report Abuse

thiru100 சதவீதமா ? 20% சதவிகிதம் வெளிநாட்டில் இருந்து கொண்டு .. வாக்களிப்பதில்லை.. மீதி இருக்கும் 10% வாழப்பழ சோம்பேறிகள் வாயில வச்சாதான் சில ப்பிடுவார்கள்.. அப்புறம் எங்கே..

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X