பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் மாசி வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்த தேர்

Added : ஏப் 18, 2019
Advertisement
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் மாசி வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்த தேர்

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை பெருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாக, மாசி வீதிகளில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது.இவ்விழா ஏப்.,8 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.,15 மீனாட்சி பட்டாபிஷேகம், ஏப்.,16 மீனாட்சி திக்குவிஜயம், நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.சித்திரை பெருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாக, பதினோறாம் திருவிழாவான நேற்று தேரோட்ட ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் விமரிசையாக செய்திருந்தனர். இதற்காக வண்ண மலர்கள், நந்தீஸ்வரர், காளை, சிவலிங்கம், கிளி, அன்னப்பறவை வடிவங்களை வண்ணத் துணிகளில் ஓவியங்களாக தீட்டி சுவாமி, அம்மன் தேர்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.முன்னதாக மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து சர்வ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுவாமி, மீனாட்சி அம்மன் அதிகாலை 4:40 மணிக்கு திருத்தேர்களில் எழுந்தருளினர்.வடம் பிடித்த பக்தர்கள்வலம்புரி சங்கொலிகள் முழங்க, சிவ கோஷங்கள் ஒலிக்க, மங்கள மேள தாளம் இசைக்க, 'ஹரஹர சங்கர... சோமசுந்தர...' கானம் விண்ணை பிளக்க, பிரியாவிடையுடனான சுவாமி எழுந்தருளிய திருத்தேரை அதிகாலை 5:45 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் அசைந்தாடி தடம் பதித்தது. சுவாமி தேர் விளக்குத்துாண் - தெற்குமாசி வீதி சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்தபோது, அம்மன் எழுந்தருளிய தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசமடைந்தனர். சுவாமி தேரை தொடர்ந்து அம்மன் தேரும் அணிவகுத்து வந்தது. தெற்குமாசிவீதியை கடந்து காலை 10:15 மணிக்கு மேலமாசி வீதி - வடக்கு மாசி வீதி சந்திப்புக்கு தேர்கள் அசைந்தாடி வந்தன. கீழமாசி வீதியை அடுத்து சுவாமி தேர் பகல் 12:30 மணிக்கும், அம்மன் தேர் பகல் 12:45 மணிக்கும் நிலையை அடைந்தது. இரவு 7:00 மணிக்கு மாசி வீதிகளில் சப்தாவர்ண சப்பரம் வலம் வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X