அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டு போடாட்டி பணத்தை கொடுங்க... கட்சிகள் மிரட்டலால் ஓட்டுபதிவு 'விர்'

Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

ஆரணி, 'ஓட்டளிக்கவில்லை என்றால், பெற்ற பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும்' என, அரசியல் கட்சியினர் மிரட்டியதால், கிராம மக்கள் ஓட்டளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த படவேடு பஞ்., உட்பட்ட குப்பம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதிக்கு குடிநீர், கழிவு நீர் கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு நடத்தினர். ஆனால், அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. இதனால், 9:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. இதையடுத்து, பிரதான கட்சிகளான, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள், அப்பகுதிக்கு சென்று, 'ஓட்டுப்போட பணம் வாங்கிக்கிட்டு, ஓட்டு போட மாட்டீர்களா? பணத்தை திரும்பி கொடுங்கள்' எனக்கூறி மிரட்டினர். இதனால், வேறு வழியின்றி, கிராம மக்கள், 9:00 மணிக்கு மேல் சென்று, ஓட்டளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-ஏப்-201921:29:02 IST Report Abuse
D.Ambujavalli இந்த ஒரு சம்பவத்தை வைத்தே ஆணையம் கட்சிகளை வளைக்கலாம் இத்தனை மக்களையும் ஒட்டுக்குப் பணம் வாங்கியவகையிலும், கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்துவிட்ட இரு கட்சியினரையும் சட்டத்தின்முன் நிறுத்துமா ஆணையம்? ஜெயக்குமார் 'திமுகதான் பணம் கொடுத்தது நாங்கள் கொடுக்கவே இல்லை' என்கிறாரே, இப்போது என்ன சொல்லுவார் ?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
19-ஏப்-201906:35:40 IST Report Abuse
Bhaskaran அரசியல் கட்சிகள் கேட்பது நியாயமே காசுவாங்கிக்கொண்டு ஏமாற்றுவது எந்த விதத்தில் சேர்த்தி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X