அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சர்கார்' சினிமா பாணியில் ஓட்டளித்த வாக்காளர்கள்

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
 'சர்கார்' சினிமா பாணியில் ஓட்டளித்த வாக்காளர்கள்

கள்ள ஓட்டுகள் போடப்பட்டதால், சர்கார் சினிமா பாணியில் நேற்று பலரும், தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர்.
சென்னை, தாம்பரம் அடுத்த முடிச்சூரைச் சேர்ந்தவர், கோபிநாத், 35; பெரம்பலுார், தனியார் மருத்துவ கல்லுாரி, உதவி பேராசிரியர். நேற்று காலை, 11:00 மணிக்கு, முடிச்சூரில் உள்ள தனியார் பள்ளிக்கு, ஓட்டளிக்க வந்தார். அவரது ஓட்டு, ஏற்கனவே, பதிவானதாக, ஓட்டுப்பதிவு மைய அலுவலர்கள் தெரிவித்தனர்.அதிர்ச்சியடைந்த கோபிநாத், அலட்சியமாக இருந்த ஓட்டுச்சாவடி ஊழியர்களுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனக்கு, டெண்டர் ஓட்டு எனப்படும், ஆய்விற்குரிய ஓட்டு பதிய அனுமதிக்குமாறு, ஓட்டுச்சாவடி ஊழியர்களிடம் கோரிக்கை வைத்தார்.

இதைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில், சமீபத்தில் வெளியான, சர்கார் பட பாணியில், '49 பி' விதியின்படி, '17 - பி' படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டு, '17 - ஏ' படிவத்தில், அவரது ஓட்டை, கோபிநாத் பதிவு செய்தார்.
இதேபோல், முடிச்சூரைச் சேர்ந்த, ராஜாஜி என்பவரின் ஓட்டும், கள்ள ஓட்டாக பதிவானது; அவருக்கும், '49 பி' விதியின் கீழ் ஓட்டுப் போட அனுமதிக்கப்பட்டது.

இது குறித்து, தேர்தல்அதிகாரிகள் கூறியதாவது:கோபிநாத்தின் ஓட்டை, கள்ள ஓட்டாக பதிவிட்டவர், 'பான் கார்டு' ஆவணம் காண்பித்துள்ளார். எங்கள் ஆவணங்களில், பான் கார்டின், கடைசி மூன்று இலக்க எண்களே பதிவாகி உள்ளன.
ஓட்டுச்சாவடி முகவர்களுக்கும், கள்ள ஓட்டு பதிவு செய்தவர் குறித்து, எந்த சந்தேகமும் எழவில்லை. கோபிநாத் வந்து விசாரித்த பின் தான், கள்ள ஓட்டு போடப்பட்டது தெரிந்தது.'சிசிடிவி' கேமரா இல்லாததால், கள்ள ஓட்டு போட்டவரின் முகம் பதிவாகவில்லை. இது குறித்து, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
 கடலுார் மாவட்டம், சிதம்பரம் லோக்சபா தொகுதி, காட்டுமன்னார்கோவில், பருவதராஜ குருகுல பள்ளி ஓட்டுச்சாவடியில், வினோத் வெங்கடேசன், 32, என்பவரது ஓட்டும், அதிகாலையே, கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டது. இதனால், அவர், டெண்டர் ஓட்டை பதிவு செய்து, சீலிட்ட கவரை, ஓட்டுச்சாவடி அதிகாரியிடம் கொடுத்தார்.
குமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பிலாங்காலை எனுமிடத்தில் உள்ள, ஓட்டுச்சாவடியில் அஜின் மற்றும் ஷாஜி ராஜேஷ் ஆகியோரும், நேற்று, '49 பி' விதியின் கீழ் ஓட்டளித்தனர். நெல்லை, பேட்டையில், ஆயிஷா சித்திகா, 38, என்ற பெண்ணின் ஓட்டும், கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவருக்கும், '49 பி' ஓட்டுரிமை வழங்கப்பட்டது.

- நமது நிருபர் குழு --

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamilselvan - chennai,இந்தியா
20-ஏப்-201916:33:56 IST Report Abuse
tamilselvan இதற்க்கு முன்னாள் தேர்தல் விதிமுறை இப்படி ஒரு முறை இருக்கிறது சினிமாகாரன் சினிமா நடிக்கறது சரி நிஜம் வழக்கையில் அவர்கள் ஜூர்
Rate this:
Cancel
Narayan - chennai,இந்தியா
20-ஏப்-201915:39:23 IST Report Abuse
Narayan one small suggestion nowadays everybody is a mobile smart phone and their number together the voters id or aadhar could be registered or link their family members with election office who in turn can send an OTP with the details of the candidates .The voter can his candidate and return the details to the election office likewise we the correct answer and send the details to TV or press competitions. since everything is computerized app. it wont go wrong. we sit at home and vote . is it possible. soft ware engineers can clear my suggestions please thanks
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-ஏப்-201910:52:14 IST Report Abuse
D.Ambujavalli அப்படியானால் வாக்களிக்கும் முறைகளை மக்களுக்கு அறிவிக்கையில் இம்மாதிரி தங்கள் ஓட்டை வேறொருவர் போட்டு விட்டால் எவ்விதம் வாக்களிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்க வேண்டும் பாமர மக்கள் பாவம், தங்கள் வாக்குரிமை திருடப்பட்டதை எண்ணி புலம்பிக்கொண்டுதான் போவார்கள் ஒரு ஐந்தாறுபேர் இவ்விதம் 49 பி அறிந்திருக்கலாம். எத்தனை கள்ள ஓட்டுக்கள் பதியப்பட்டனவோ? நிற்க, தாம்பரம் போன்ற நகர்ப்புற பூத்திலேயே காமிரா இல்லையே, ஆணையம் எல்லா பூத்துகளிலும் காமிரா வைத்திருக்கிறோம் என்று பீற்றிக்கொண்டதெல்லாம் உள்ளாளாக்கட்டிதானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X