அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க., - அ.ம.மு.க.,வினர் போட்டி போட்டு பட்டுவாடா!'

Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை, :''தி.மு.க.,வும், அ.ம.மு.க.,வும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர்,'' என, மீன் வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு, மக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் கிளர்ந்தெழுந்து, ஓட்டுப் போட காரணம், எம்.ஜி.ஆர்., - ஜெ., அலை வீசுகிறது. தி.மு.க.,விற்கு எதிரான அலை இது என்பது கண்கூடாக தெரிகிறது. மக்கள் முகத்தில், மகிழ்ச்சியை காண முடிகிறது.தமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகளிலும், 22 சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும். சென்னையில், நான்கு இரவுகள், தி.மு.க., - அ.ம.மு.க., திட்டமிட்டு, ஏழை மக்களை குறிவைத்து, 200 ரூபாய் முதல், 250 ரூபாய் வரை, பணம் கொடுத்துள்ளனர்.
அ.ம.மு.க.,விடம், 'மிடாஸ்' மதுபான ஆலை வழியாக கொள்ளையடித்த பணம், பல்லாயிரம் கோடி உள்ளது. தி.மு.க.,விற்கு, '2 ஜி' பணம் உள்ளது. அவ்வளவு பணம் இருந்தும், 200 ரூபாய் கொடுத்து ஏமாற்றுகின்றனர். இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என, மக்கள் நினைக்கின்றனர்.
ஏழை மக்களின் தன்மானத்தை, 200 ரூபாயாக கருதும், கேவலமான அரசியல் நடத்துகின்றனர். இதில், அ.தி.மு.க., ஈடுபடாது.
தமிழகம் முழுவதும், எம்.ஜி.ஆர்., - ஜெ., அலை வீசுகிறது. இதை பொறுக்க முடியாமல், எங்களுடன், தேர்தல் ஆணையம் கூட்டு வைத்திருப்பதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நொண்டி சாக்கு கூறுகிறார்.
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரை சார்ந்தவர்கள் வீடுகளில், பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால், எல்லா கட்சியினர் வீட்டிலும், சோதனை நடத்த வேண்டும் என, ஏட்டிக்கு போட்டியாக கூறுவது, ஏற்புடையதல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-ஏப்-201906:50:09 IST Report Abuse
Bhaskaran நீங்க பணமே கொடுக்கலியா எதுக்கு சாமி அபாண்டமாக புளுகரீங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X