அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஸ்டாலின் ஆலோசனை உதயநிதி பங்கேற்பு

தமிழகத்தில், நேற்று நடைபெற்ற, 38 லோக்சபா தொகுதிகள், 18 சட்டசபை தொகுதிகளின் இடை தேர்தலில் நடந்த ஓட்டு பதிவு விபரம் குறித்து, தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சி களின் வேட்பாளர்கள், மாவட்டச் செயலர் களிடம், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் விசாரித்தார்.

 ஸ்டாலின், ஆலோசனை, உதயநிதி, பங்கேற்பு

அப்போது, ஸ்டாலினுடன், மருமகன் சபரீசன், மகன் உதயநிதி ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள ஓட்டுச் சாவடியில், ஓட்டு பதிவு செய்த, அவர், கட்சி

அலுவலகமான, அறிவாலயத்திற்கு வந்தார். அங்கிருந்த கட்சியினரிடம், சிரித்த முகத்துடன், ''நமக்கு சாதகமான செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன,'' எனக் கூறி, உள்ளேசென்றார்.

தேர்தல் பணிக் குழு உறுப்பினர்களிடம் இருந்து, தமிழகம் முழுவதுமிருந்து வந்த, ஓட்டுப்பதிவு விபரங்களை கேட்டறிந்தார். தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின்
வேட்பாளர்கள் சிலரிடம், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தொகுதி நிலவரம், ஓட்டுப் பதிவு சதவீதம் உள்ளிட்டவற்றை, ஸ்டாலின்விசாரித்தார்.

பின், தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றுஉள்ள, வழக்கறிஞர்கள் சிலரை சந்தித்து,சில உத்தரவு களை பிறப்பித்துள்ளார். அதாவது, 'தென் மாவட்டங் களில், வி.ஐ.பி.,க் கள் போட்டி யிடும் தொகுதிகளில், ஓட்டுச்சாவடியை கைப்பற்ற, ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ள தகவல்வந்துள்ளது. இது பற்றி,

Advertisement

தேர்தல் ஆணையத்திடம், புகார் செய்யுங்கள்' என்றார்.

பின், மாநில நிர்வாகி களிடம், ஸ்டாலின் ஆலோசனை நடத்தியபோது, மருமகன் சபரீச னும், மகன் உதயநிதியும் கலந்து கொண்டனர்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-ஏப்-201903:35:26 IST Report Abuse

J.V. Iyerவாரிசு குடும்ப முன்னேற்ற கழக கட்சியில் உதயநிதி நம்பர் டூ தடையாய் இருப்பது துரைமுருகன். மற்றொரு வாரிசு குடும்பம் வேண்டாமென்று.... சுடலை..இப்படி.. கோவிச்சுக்காதீங்க துரைமுருகன் அண்ணே உங்களால் திமுக வாரிசுகளுக்கு பிரச்சினைதான்.

Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
23-ஏப்-201913:33:07 IST Report Abuse

Tamilnesan ஒரு மாதம் கழித்து உதயநிதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ட்டது என்று செய்தி வரும்.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
23-ஏப்-201911:50:32 IST Report Abuse

Malick Rajaஇந்த மாதிரியான நிலைகள் மனித பண்பில் உள்ளதுதான் .. ஜெயலலிதா வெறுத்தார் காரணம் அவ்ருக்கு வாரிசு இல்லை . மோடி சொல்வார் வாரிசு வேண்டாம் அவருக்கு வாரிசும் இல்லை அதற்க்கான வாய்ப்பும் இல்லை .. எனவே வயசுக்கு வக்கற்றவர்கள் சொல்வார்கள் வாசுகள் தேவை இல்லை . அதே சமயம் தகுதிகள் கொண்டு வாரிசுகள் வருவதும் இருக்கிறது . திமுக வுக்கு சூழ்நிலை கொண்டு நடக்கும் கட்சி .. உதயநிதி ,சப்ரெசன் எல்லாம் அப்படி இப்பைட்தான் அவர்களிடம் எந்த பதவியும் இல்லை என்பதையும் கணக்கிலெடுக்கவேண்டும்

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X