பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துறையினர் கடும் எச்சரிக்கை

Added : ஏப் 19, 2019
Share
Advertisement
 வனத்துறையினர் கடும் எச்சரிக்கை

பெ.நா.பாளையம்:காட்டில் தீ வைத்து, அரியவகை தாவரங்களை எரித்து நாசம் செய்பவர்கள் மீது வனத்துறை சட்டப்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான புல்தரை, ஈச்சம்புற்கள் உள்ளன. கணுவாய், தடாகம், கோவனுார் உள்ளிட்ட மலை அடிவாரங்களில் வசிப்பவர்களில் சிலர், கால்நடைகளை மலையில் உள்ள புல்தரையில் மேய விடுவது வழக்கம்.இன்னும் சிலர் சட்டத்துக்கு புறம்பாக, அங்குள்ள ஈச்சம்புற்களை அறுத்து நகர்புறங்களில் விற்பனை செய்கின்றனர். தற்போதைய கோடை காலத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக, மலையில் உள்ள புற்கள், ஈச்சம்புற்கள் உள்ளிட்டவை முழுவதுமாக காய்ந்து விட்டன.இன்னும் சில மாதங்களில் தொடங்கும் பருவமழையின் போது, புதியதாக புற்கள் முளைக்க இடம் இருக்காது எனக் கருதி, மலைகளில் கால்நடையை மேய விடுபவர்கள் மற்றும் ஈச்சம்புற்களை அறுத்து விற்பனை செய்வோர் நள்ளிரவில் காடுகளுக்குள் புகுந்து புற்களுக்கு தீ வைத்து விடுவது வழக்கமாக உள்ளது.
இதனால் புற்களோடு அரிய வகை மரங்களும் எரிந்து நாசமாகின்றன. காட்டுக்கோழி உள்ளிட்ட பறவையினங்களும் தீயில் கருகி இறக்கின்றன.பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சுரேஷ்குமார் கூறுகையில், ''பெரியநாயக்கன்பாளையம், கோவை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள காடுகளில் தீத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள், தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வனங்களில் அத்துமீறி நுழைந்து தீ வைப்பவர்கள் மீது வனத்துறை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X