பதிவு செய்த நாள் :
'ஒன்றுக்கும் உதவாத நபரை
பிரதமராக்க முயற்சிக்கிறது காங்.,'

பாகல்கோட்:'ஒன்றுக்கும் உதவாதவரை பிரதமராக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. ஆனால் தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்தும் செயல்படும் பிரதமர் தான் நம் நாட்டுக்கு தேவை' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

 'ஒன்றுக்கும் ,உதவாத, நபரை ,பிரதமராக்க,முயற்சிக்கிறது காங்.,'

கர்நாடகாவில் உள்ள பாகல்கோட் மற்றும் சிக்கோடி லோக்சபா தொகுதிகளில் நடந்த தேர்தல் பிரசார பொது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்திய போது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கண்ணீர் விட்டு அழுதது. ஆனால் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாக். பயங்கரவாதிகள் கதறுவதை நீங்கள்

பார்த்தீர்கள்.எதிரியை கண்டு அழுகின்ற அரசு வேண்டுமா அல்லது எதிரிகளை கதறி ஓட வைக்கும் அரசு வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.காங்கிரசுக்கும் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் குடும்பஅரசியல் ஊழல் ஆகியவற்றில் மட்டும் இருவரும் ஒற்றுமையுடன் செயல்படுகின்றனர்.

அடுத்தவேளை உணவிற்கே வழி இல்லாதவர்கள் தான் ராணுவத்தில் சேருவர் என முதல்வர் குமாரசாமி கூறினார். இப்படிப்பட்டவர்கள் பொது வாழ்க்கையில் இருந்தே துாக்கி எறியப்பட வேண்டும்.காங். உடனான கூட்டணியில் தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என குமாரசாமி வெளிப்படையாக கண்ணீர் வடிக்கிறார்.

இப்படிப்பட்ட செயல்படாத அரசை தான் காங். கூட்டணியால் தர முடியும். ஒன்றுக்கும் உதவாதவரைபிரதமராக்கவே காங். முயற்சிக்கிறது. ஆனால் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் செயல்படும் அரசு தான் இன்றைய நம்முடைய தேவையாக இருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.


குஜராத் மாநிலம் அம்ரேலி லோக்சபா தொகுதியில்

Advertisement

பிரதமர் மோடி பேசியதாவது:சர்தார் வல்லபபாய் படேலை தங்கள் தலைவர் என காங்கிரசார் கூறுகின்றனர். ஆனால் குஜராத்தில் படேலுக்கு பெரிய சிலை அமைக்கப்பட்ட பின் காங். தலைவர்களில் ஒருவர் கூட இதை காண வரவில்லை.

நேருவின் புகழை சிறுமைபடுத்தவே படேலுக்கு சிலை வைத்ததாக காங். குற்றம்சாட்டுகிறது. படேல் மிகப் பெரிய தலைவர் அவருக்கு சிலை வைத்து நேருவை சிறுமைபடுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiru - Madurai,இந்தியா
19-ஏப்-201923:26:27 IST Report Abuse

Thiruகாங்., குறைசொல்லும் நீர் மட்டும் இந்தியாவிற்கு என்ன செய்தீர்களாம் ?? முதலில் உங்கள் பிழையை திருத்திகொண்டு அடுத்தவர்கள் பற்றி பேசுவீராக.

Rate this:
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
19-ஏப்-201920:44:37 IST Report Abuse

Muruganநேரு ஒரு கட்சி சார்ந்தவர் …..ஆமாம் இந்த ராகுலுக்கு நாகரிக அரசியல் என்றால் என்ன என்று கூட தெரியாத, இவர் எல்லாம் நாளை இந்தியாவின் பிரதமர் என்றால் ………………..…………………. ஐரோப்பாவில் இத்தாலியை தவிர எல்லோருமே மோடி ஆதாரவாளர்களே………………..

Rate this:
sankaseshan - mumbai,இந்தியா
19-ஏப்-201919:44:00 IST Report Abuse

sankaseshanGst யால் கசக்கி பிழியப்படுகிறோம் அத்தியாவசிய பொருட்களின் இன்றய விலை தெரியுமா எல்லாம் கட்டுக்குள் இருக்கின்றன. உணவு உண்ணும்போது இதை நினைவில் கொள்ளவும் பருப்பு உப்பு புலிமிளகாய் upa அரசின் விலை மறந்து விட்டதா

Rate this:
மேலும் 56 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X