சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் இருவர் பலி

Added : ஏப் 19, 2019
Advertisement

ரிஷிவந்தியம்:ரிஷிவந்தியம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இருவர் இறந்தனர். ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகன் ஏழுமலை,17; இவர் தனது தாய் பூங்கொடி,38; பாட்டி கண்ணு, 58; இரண்டு வயது பெண் குழந்தையுடன் தியாகதுருகம் - திருவண்ணாமலை சாலையில் பாசார் நோக்கி பைக்கில் சென்றுள்ளார். கீழ்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஏழுமலை பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. தலையில் படுகாயமடைந்த ஏழுமலை இறந்தார். படுகாயமடைந்த பெண் குழந்தை உட்பட கண்ணு, பூங்கொடி, மூவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.சிகிச்சை பலனின்றி பூங்கொடி இறந்தார்.விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டு பிடித்து அந்த நபரை கைது செய்யக்கோரி தியாகதுருகம் - திருவண்ணாமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. ரிஷிவந்தியம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்திற்கு பிறகு ஏழுமலை உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X