அக்காவும், அப்பாவும், காங்., மகனும், மருமகளும், பா.ஜ.,

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (17)
Advertisement
அக்காவும், அப்பாவும், காங்.,  மகனும், மருமகளும், பா.ஜ.,

இந்திய கிரிக்கெட் வீரர், ரவீந்திர ஜடோவும், அவர் மனைவியும், பா.ஜ.,வில் சேர்ந்த நிலையில், அவரின் அக்கா மற்றும் அப்பா, காங்கிரசில் சேர்ந்துஉள்ளனர்.

லோக்சபா தேர்தலை ஒட்டி, கட்சி தாவல்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. பெரும்பாலும், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், 'சீட்' கிடைக்காமல், பரஸ்பரம் கட்சி தாவுகின்றனர். இந்த கட்சி தாவல், பல இடங்களில், குடும்ப தாவல்களாக, உறவுகளுக்குள் விரிசல் ஏற்படும் வகையில் அமைந்துஉள்ளது.

இந்த தாவலுக்கு உதாரணமாக, சமீபத்தில், கிரிக்கெட் வீரர், ஜடேஜா வின் குடும்பத்தைக் கூறலாம். ரவீந்திர ஜடேஜாவும், அவர் மனைவி, ரிபாவாவும், சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்து, பா.ஜ.,வுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.


தேர்தல் பணி

தேர்தல் நெருங்கிய நிலையில், விபாவா, பா.ஜ.,வின் தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டார்.இந்நிலையில், திடீர் திருப்பமாக, ஜடேஜாவின் அக்கா, நைனாபாவும், அவரது அப்பா, அனீருத்தீன் சிங்கும், காங்கிரசில் சேர்ந்துஉள்ளனர்.

குஜராத், ஜாம் நகரில் நடந்த, தேர்தல் பிரசார கூட்டத்தில், படேல் இட ஒதுக்கீட்டுக்கு போராட்டம் நடத்திய, ஹர்திக் படேல் முன்னிலையில், காங்கிரசில் இணைந்தனர்.இந்த தாவல், கிரிக்கெட் உலகம் மட்டுமின்றி, குஜராத் அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. மகனும், மருமகளும், பா.ஜ.,விலும், அக்காவும், அப்பாவும், காங்கிரஸ் ஆதரவாளராகவும் மாறியுள்ளது, விவாதத்திற்குரிய அம்சமாக, அந்த மாநிலத்தில் மாறியுள்ளது.

ஒரே குடும்பத்தில் நடந்துள்ள கட்சி தாவல், குடும்ப உறவுகளை பிரித்து விடாதா என, அவர்களின் உறவுகள் கவலையில் உள்ளனர்.இதுகுறித்து, நைனாபா கூறியதாவது:என் தம்பியும், அவர் மனைவியும் தங்களின் வழியில் செல்கின்றனர்; அவர்களை நாங்கள் தடுக்க முடியாது. எனக்கும், என் அப்பாவுக்கும் விவசாயிகள் மீதும், நாட்டு மக்கள் மீதும் அக்கறை உள்ளது.உரம் விலை உயர்ந்து விட்டது; விவசாயிகளுக்கு சரியான கொள்முதல் விலை கிடைக்கவில்லை. வங்கி களில் பெற்ற கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் திணறுகின்றனர்.


தடுமாற்றம்

மத்தியிலும், குஜராத்தி லும், பா.ஜ.,வின் ஆட்சியில் மக்கள் தடுமாறுகின்றனர். ஓட்டு போட்ட மக்களே, அரசை மாற்றுவர். தற்போது, பா.ஜ.,வை விட காங்கிரசே பரவாயில்லை என, தெரிந்து கொண்டோம்; அதனால், காங்கிரசில் சேர்ந்துள்ளோம்.நாங்கள் பதவிக்காக கட்சியில் சேரவில்லை. ஒரு பெண்ணாக, பெண்களில் அதிகார பரவலுக்காக காங்கிரசில் சேர்ந்துள்ளேன்; என் தந்தை ஆதரவளித்து உள்ளார்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
25-ஏப்-201902:41:11 IST Report Abuse
Murugan எங்கே விபரங்களை விபரீதமாக்கும் கூட்டம்??
Rate this:
Share this comment
Cancel
19-ஏப்-201910:17:11 IST Report Abuse
மதுவந்தி எது ஜெயித்தாலும் குடும்பத்திற்கு லாபம். பிரிவா? கண்துடைப்பு. நாட்டிற்கு பயன், இல்லா விளம்பரம்.
Rate this:
Share this comment
murugu - paris,பிரான்ஸ்
19-ஏப்-201911:54:12 IST Report Abuse
muruguதமிழிசை குடும்பத்தை போலவா ???...
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
19-ஏப்-201909:46:28 IST Report Abuse
S.Baliah Seer குமாரி அனந்தன் புதல்வி பா.ஜ.க -வில் இல்லையா?பிழைக்கத்தெரிந்தவர்கள்.ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் இவர்கள் வாழ்க்கை வசந்தமாக இருந்துகொண்டே இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X