மம்தா படத்துக்கு தடை: எதிர்க்கட்சிகள் கோரிக்கை

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (13)
Advertisement

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை விவரிக்கும், பாகினி திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி, எதிர்க்கட்சிகள், தலைமை தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளன.


பிங்கி பால்மண்டல் தயாரிப்பில், நேகா தத்தா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பாகினி. பாகினி என்றால், பெண் சிங்கம் என்று பொருள். மம்தாவின் வாழ்க்கையை விவரிக்கும் இப்படத்தின், 'டிரெய்லர்' சில தினங்களுக்கு முன் வெளியானது. திரைப்படம், மே முதல் வாரத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை தடை செய்து, பட வெளியீட்டை தள்ளி வைக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூ., பொதுச் செயலர், சீத்தாராம் யெச்சூரி, பா.ஜ., மாநில துணைத் தலைவர், ஜாய் பிரகாஷ் மசூம்தார் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்து உள்ளனர்.

ஆனால், ''பாகினி, முழுக்க முழுக்க மம்தாவின் வாழ்க்கை வரலாறு அல்ல; ஒரு சாதாரண பெண், 34 ஆண்டு கால, கம்யூ., ஆட்சியை அகற்றியதை மட்டுமே குறிக்கிறது,'' என, நேகா தத்தா கூறியுள்ளார்.எது எப்படியோ, 2016ல் தயாரித்து, வெளியிடாமல் முடங்கிக் கிடந்த படத்திற்கு, தேர்தலால் இப்போது மவுசு வந்து உள்ளது.


'பி.எம்., மோடி' படம் - விவேக் ஓபராய் மகிழ்ச்சி


உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பிரதமர் மோடியின் வாழ்க்கையை விவரிக்கும், பி.எம்., மோடி திரைப்படத்தை, தேர்தல் அதிகாரிகள், நேற்று முன்தினம் பார்த்தனர்.



இது தொடர்பாக, மோடியாக நடித்த விவேக் ஓபராய் கூறியதாவது: தேர்தல் அதிகாரிகளுடன் படம் பார்த்தேன். படம் முடிந்ததும், அவர்களிடம் கருத்து கேட்டேன். அதற்கு அவர்கள் அளித்த பதிலை நான் தெரிவிக்க முடியாது. ஆனால், அந்த பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. படத்தை உடனடியாக திரையிட அனுமதிக்க வேண்டும் என்பதே, நான் அவர்களுக்கு விடுத்த ஒரே கோரிக்கை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
19-ஏப்-201915:10:30 IST Report Abuse
Chowkidar NandaIndia "சாரதா பேகம்" அல்லது "சாராதாவால் வந்த வாழ்வு" என்று படத்திற்கு பெயர் வைத்திருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
19-ஏப்-201912:05:03 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மம்தாவின் முழு கதையை எடுத்தால் ஒரு ஓட்டுக்கூட விழாது மேற்குவங்கத்தில். கள்ளக்குடியேறிகளை ஊக்குவித்து , மண்ணின் மைந்தர்களை ஒழித்த கதை.
Rate this:
Share this comment
Cancel
19-ஏப்-201911:12:05 IST Report Abuse
karthik பேர் குரங்கிணி ஆக இருக்க வேண்டும்
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
19-ஏப்-201915:14:21 IST Report Abuse
Chowkidar NandaIndia"நடுத்தெரு நாயகி" அல்லது "கமிஷனரை காத்த கன்னி" என்று வைத்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X