பொது செய்தி

இந்தியா

14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement
14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

புதுடில்லி: இந்தாண்டு, இதுவரை, 14 பொருட்களுக்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு பகுதியிலும்,பாரம்பரிய, கலாசார சிறப்புகளை கொண்ட வேளாண் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு, புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அப்பொருட்களை, அவற்றுக்கான சிறப்பு பெயருடன் வேறு யாரும் சந்தைப்படுத்த முடியாது. மேலும் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு, அதிக விலையும் கிடைக்கிறது.

இந்த வகையில் இந்தாண்டு, கேரளாவின், வயநாடு பகுதியில் விளையும் 'ரோபஸ்டா' காபி, கர்நாடகாவின் கூர்க் பகுதியில் உற்பத்தியாகும் 'கூர்க் அரபிகா' காபி, ஆந்திராவின், அரக்கு பள்ளத்தாக்கு, 'அரபிகா' காபி உள்ளிட்ட, 14 பொருட்களுக்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் கருஞ்சீரகம், கந்தமால் மஞ்சள் ஆகியவையும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே, திருப்பதி லட்டு, நாக்பூர் ஆரஞ்சு உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில், 2004ல், முதன் முறையாக, டார்ஜிலிங் தேயிலைக்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. தற்போது, 344 பொருட்கள் இப்பட்டியலில் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஏப்-201908:26:07 IST Report Abuse
Srinivasan Kannaiya கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு, பண்ருட்டி பலாப்பழம் போன்றவற்றிற் இதில் உண்டா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X