பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்த ஓட்டு ரஜினிக்கே: 'ஹேஸ்டேக்' முன்னிலை

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (82)
Advertisement

சென்னை: தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், 'அடுத்த ஓட்டு ரஜினிக்கே' என்ற 'ஹேஸ்டேக்'கை, அவரது ஆதரவாளர்கள் உருவாக்கி, இந்திய அளவில் முன்னிலைப்படுத்தி உள்ளனர்.


தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று முடிந்தது. இந்த தேர்தலில் போட்டியிடாமல் ரஜினி ஒதுங்கி கொண்டார். 'சட்டசபை தேர்தல் தான் என் இலக்கு' என, கூறியுள்ள ரஜினி, 'இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை' எனவும் தெரிவித்திருந்தார். தற்போது, ரஜினி நடித்து வரும், 'தர்பார்' உட்பட, கூடுதலாக ஒரு படத்தை நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளார். 2021 சட்டசபை தேர்தலுக்குள், கட்சி பெயர் மற்றும் சின்னத்தை அறிவித்து, அரசியல் களத்தில் இறங்க உள்ளார்.

இந்நிலையில், ரஜினி ஆதரவாளர்கள், 'அடுத்த ஓட்டு ரஜினிக்கே' என்ற, ஹேஸ்டேக்கை, டுவிட்டரில் உருவாக்கி, அதை, இந்திய அளவில் முன்னிலைப்படுத்தி உள்ளனர். அதில், 'அடுத்த ஓட்டு தலைவருக்கு தான்' எனக் கூறி, ரஜினி படத்துடன் பகிர்ந்து வருகின்றனர். '2021ம் ஆண்டுக்காக காத்திருக்கிறோம்' என, அவரது ஆதரவாளர்கள், ஆயிரக்கணக்கில், 'ரீ-டுவிட்' செய்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RPM - Dindigul,இந்தியா
19-ஏப்-201915:46:38 IST Report Abuse
RPM இங்கு கருத்து கூறும் நபர்களை நினைத்தால் ..... கருத்து ஆசாமிகளே...உங்களிடம் ஓர் கேள்வி... இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் ஊழல் கறை படியாத அரசியல்வாதிகள் யாராவது உண்டா????? ரஜினி ..இறைநம்பிக்கை உள்ள ....மனதில் பட்டதை தைரியமாக கூறும் ....நல்ல மனிதர்... அவர் அரசியலுக்கு வருவதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு???? உங்களுக்கு ஊழல் செய்யும் சுயநல அரசியல்வாதிகள் தான் வேண்டும்... கருத்து கூறுகின்றேன் என்று புதிதாக வருபவரை இகழ்ந்து பதிவு செய்வது... என்னை பொருத்தவரை தற்போதைய ஊழல் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு அரணே இவர்கள் தான்...
Rate this:
Share this comment
Cancel
Vasanth - Chennai,இந்தியா
19-ஏப்-201915:45:00 IST Report Abuse
Vasanth கருப்பு என்ற ஒரு நிறத்தை அருவருப்பாக கருதிய காலகட்டத்தில் அறிமுகமாகி, தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா மற்றும் உலகமெங்கும் தனக்கென்று ஓர் அசைக்க முடியாத இடத்தினை பெற்றிருக்கின்றார். இது வெறும் அதிர்ஷ்டத்தால்தான் மட்டுமே பெற முடியாது. மக்களுக்கு எது பிடிக்குமோ அதை மீடியா இல்லாத அந்த காலத்திலேயே, அதை உணர்ந்து, யோசித்து, பல பயிற்சிகள் செய்து தனக்கென்று ஒரு தனித்துவத்தை உருவாக்கியவர். உலகில் எல்லா திரைதுறையிலும் சூப்பர்ஸ்டார் என்ற பட்டம் பல தலைமுறைகளுக்கு மாறி விட்டது. தமிழ் திரை உலகில் மட்டும்தான் சூப்பர்ஸ்டார் என்றால் ரஜினி மட்டுமே வேறு எவரும் கிடையாது. தன் முதல் அரசியல் பிரவேசம் பற்றிய அறிக்கையில் அதைத்தான் அவர் குறிப்பிட்டார். எப்படி நான் என் தொழிலில் வெற்றிபெற்றேனோ அதைப்போலவே அரசியலிலும் வெற்றிபெறுவேன், நாட்டிற்கு நல்லதை செய்வேன். தேர்தல்தான் இலக்கு என கூறிவிட்டார். அதுவரை அவர் தன் தொழிலை செய்கிறார். உண்மையில் நாட்டிற்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் அடுத்தவரை குறை கூறாமல் அவரவர் தொழிலினை பாருங்கள். உண்மையான, நேர்மையான ஆளுமை குணம் கொண்டவர்கள் அதிகம் பேச மாட்டார்கள். செயலில் செய்து காட்டுவார்கள்.
Rate this:
Share this comment
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
23-ஏப்-201919:07:13 IST Report Abuse
வந்தியதேவன்ரஜினி ரசிகரே.... ////எப்படி நான் என் தொழிலில் வெற்றிபெற்றேனோ அதைப்போலவே அரசியலிலும் வெற்றிபெறுவேன்/// அது வேற வாய்... இது நாற வாய்... ஆமா... உனக்கு திரையுலகை பற்றி தெரியுமா....? அதில் பணிபுரிந்தவன்... அது ஒரு “ஓனிக்ஸ் குப்பை தொட்டி” போல வெளியே அழகாய் இருக்கும்... உள்ளே பொணம் நாத்தம் அடிக்கும்... அதன் உள்ளே இருந்து வந்தவங்க.... மேக்கப்போட வெளியே வருவதாலும்... ஒரு படத்துல... வடிவேல் ஓட்டலுக்கு அடிவாங்கி சட்டை கிழிஞ்சு வரும்போதுகூட கம்பீரமா வருவதைப்போல வருவாங்க...? அந்த திரையுலகத்தைப் பற்றி என்ன தெரியும்..? சரி அத விடுங்க... அடுத்த கேள்விக்கு வருகிறேன்.../////அதைப்போலவே அரசியலிலும் வெற்றிபெறுவேன்/// அரசியல் என்பது சினிமா மாதிரியோ... வேறு மாதிரியோ தொழில் செய்யுற இடமல்ல... அந்த அரசியல் பாதையில்..... காட்டாறுகளும், எரிமலைகளும், கடும்புயலும், பெருவெள்ளமும், கனமழையும், சதுப்புநிலக் காடுகளும், புதைகுழிகளும், வறண்ட பாலைவனமும் இருக்கும்... அதையெல்லாம் கடந்து வெற்றி பெறுவது என்பது இயலாத காரியம் அல்ல... சினிமா ஹூரோ மாதிரி அல்ல... வஞ்சகம், சூது, சூழ்ச்சி, துரோகம், முதுகில் குத்துதல் போன்ற பல்வேறு கீழ்த்தர இயல்புகள் நிறைந்த உலகம் அரசியல் உலகம்... அதில் இறங்கிய எத்தனையோ பேர் காணாமல் போயுள்ளனர்.. சிலர் துண்டக்காணோம்... துணியக்காணோம்..னு தப்பி வந்தவர்கள் உண்டு... எடுத்துக்காட்டாய்... சிங்க நிகர் ஜெயலலிதாவே... எத்துணை, எத்துணை போராட்டங்களை சந்தித்து, துரோகம், சூழ்ச்சி, முதுகில் குத்தல் போன்றவற்றை கண்ட துவண்டு, மீண்டும் எழுந்து வெற்றி பெற்றார்... அந்த மனோதைரியம் ரஜினிக்கு வருமா என்பது சந்தேகமே...? அரசியல் ஒரு மாய உலகம்... வேதாள உலகம்... பேய் உலகம்... பிணம் தின்னும் கழுகுகள் நிறைந்த உலகம்... அதில் நீந்தி கரையேறுவது அவ்வளவு எளிதல்ல.... அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.... ரஜினியைவிட அதிகமாக கிராமத்து ரசிகர்களை கொண்ட விஜயகாந்தே காணாமல் போய்விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... நடிகர்திலகம் சிவாஜி, பாக்கியராஜ் போன்ற ஜாம்பவான்களே துண்டக்காணோம் துணியக்காணோம்...னு ஓடி தப்பி பிழைத்தவர்கள்... ரஜினி...க்கு அந்த மனோ தைரியமும், ஃப்ராடு குணமும், தான் முன்னேற வேண்டுமெனில் அடுத்தவன் குடியை கெடுக்கும் குணம் இருக்குமா என்பது சந்தேகமே... அது இல்லையென்றால்... அவரும் துண்டக்காணோம், துணியக்காணோம்..னு ஓட வேண்டியதுதான்.......
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
19-ஏப்-201914:47:15 IST Report Abuse
RM pavam pa .vitrunga avarai.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X