பொது செய்தி

தமிழ்நாடு

பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்

Updated : ஏப் 20, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (11)
Advertisement

மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி, கடலென திரண்ட பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் விண்ணை பிளக்க, வைகை ஆற்றில் இன்று ( 19 ம் தேதி) காலை 5.50 மணியளவில் எழுந்தருளினார்.





மதுரையில் சித்திரை திருவிழா நிறைவையொட்டி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.






சைவமும், வைணவமும் இணையும் வகையில் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.,15ல் அம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்.,16ல் திக்கு விஜயம், ஏப்.,17ல் திருக்கல்யாணம், ஏப்.,18ல் தேரோட்டம் நடந்தது.


கள்ளழகர் புறப்பாடு:


கள்ளழகர் தங்கக்குதிரையில் அழகர் கோவிலிலிருந்து மதுரை நோக்கி ஏப்.,17 மாலை புறப்பட்டார். மூன்று மாவடியில் நேற்று(ஏப்.18) காலை 6 மணிக்கு எதிர்சேவை நடந்தது. மாலை 5:00 மணிக்கு மாநகராட்சி மைய மண்டபத்தில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று இரவு 9:30 மணிக்கு மேல் பெருமாள் திருமஞ்சனமாகி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை சாற்றி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.






வைகையில் அழகர்:


இத்திருவிழாவின் முத்தாய்ப்பான நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் கண்கொள்ளாக் காட்சியை காண லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் இன்று கூடினர். தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகருக்கு இன்று அதிகாலை(ஏப்.,19) 2:30 மணியளவில் கருப்பண சுவாமி கோயிலில் ஆயிரம் பொன் சப்பரம் நிகழ்ச்சி நடந்தது.





பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த கள்ளழகர், வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில், பச்சைப் பட்டு உடுத்தி அதிகாலை 5.50 மணியளவில் எழுந்தருளினார். கோவிந்தா முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்து வரவேற்றனர். முன்னதாக வெள்ளைப்பட்டு உடுத்தி வெள்ளிக்குதிரையில் வந்த வீரராகவ பெருமாள், அழகரை வரவேற்றார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மறத்தமிழன் - Madurai,இந்தியா
20-ஏப்-201900:57:00 IST Report Abuse
மறத்தமிழன் ஓம் நமோ நாராயண
Rate this:
Share this comment
Cancel
Dalda - Varanasi,இந்தியா
19-ஏப்-201921:24:07 IST Report Abuse
Dalda மீனாட்சி திருக்கல்யாணம் முதல் நாள் மறுநாள் கள்ளழகர் மதுரையம்பதி வருகிறார் முன்னதாக வந்திருந்து மீனாட்சி திருக்கல்யாணம் நடத்தி வைக்க வேண்டாமோ? எங்கோ இடிக்கிறது விவரமறிந்தவர்கள் விளக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
19-ஏப்-201918:26:16 IST Report Abuse
DNS.Udpm இத்தனை கோடி எம்ஹிந்து மக்கள் கூடும் இடத்தில் வராத பிரச்சினை சில நூறு பேர் சேர்த்து நடத்தும் விநாயகர் ஊர்வலத்தில் ஏன் வருகிறது???சிந்திப்பீர்
Rate this:
Share this comment
ganapati sb - coimbatore,இந்தியா
20-ஏப்-201910:27:13 IST Report Abuse
ganapati sbகோடி பேர் கூடும் இடத்தில தகராறு செய்தால் அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள் நூறுபேர் கூடும் இடத்தில் நூறு பேர் வந்தால் பிரச்சனை செய்யலாம் . மேலும் தனக்கு பிரச்சனை என்றால் கோயிலுக்கு செல்பவர்கள் இந்துக்கள் அந்த கோயிலுக்கே பிரச்சனை என்றால் தட்டிக்கேட்பவர்கள் இந்துத்துவர்கள். வித்தியாசம் அவ்வளவுதான் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X