பொது செய்தி

இந்தியா

ஓட்டு போட்டாரா சுந்தர் பிச்சை? : வைரலான போட்டோ

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (19)
Advertisement

புதுடில்லி : நேற்று (ஏப்.,18) இந்தியாவில் தமிழகத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஓட்டளித்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. அத்துடன் சுந்தர் பிச்சை, கூட்டத்துடன் இருப்பது போன்ற போட்டோவும் வைரலானது.






ஆனால் அந்த போட்டோ, 2017 ம் ஆண்டு காரக்பூர் ஐஐடி.,யில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள வந்த போது எடுத்த படம். பெரும் மாணவர்கள் கூட்டத்துடன் சுந்தர் பிச்சை செல்பி எடுத்துக் கொண்டது போன்ற படமும் 3000 ஐஐடி மாணவர்களுடன் சுந்தர் பிச்சை கலந்துரையாடிய போது எடுக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.





தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் பிறந்தவரான சுந்தர் பிச்சை, பள்ளி படிப்பை சென்னையிலும், பட்டப்படிப்பை 1993 ல் காரக்பூர் ஐஐடி.,யிலும் முடித்தவர். பின்னர் அமெரிக்கா சென்ற அவர் ஸ்டான்போர்டு மற்றும் பென்சைல்வேனியா பல்கலை.,களில் படித்தார். தற்போது கலிபோர்னியாவில் வசித்து வரும் சுந்தர் பிச்சை, இந்திய தேர்தலில் ஓட்டளித்ததாக சமூகவலைதளங்களில் பரவிய தகவல் குறித்து கூகுள் தலைமையகம் விளக்கம் அளித்துள்ளது.





அதில், சுந்தர் பிச்சை அமெரிக்க குடியுரிமை பெற்றவர். தற்போதைய விதிகளின்படி அவரால் இந்திய தேர்தலில் ஓட்டளிக்க முடியாது என தெரிவித்துள்ளது. 2018 ம் ஆண்டு நடிகர் விஜய் நடித்து வெளியான சர்கார் படத்தின் தாக்கத்தில் இருந்து இளைஞர்கள் இன்னும் வெளியில் வராததே இதற்கு காரணம் என இணைய ஆர்வலர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
19-ஏப்-201914:16:35 IST Report Abuse
Siva மாற்றம் எதுவும் நம்மிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும்... ஆனால் இலவசமாக வாழும் இலவசம்பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே யாரும் யாரையும் குறை சொல்ல முடியாது... எல்லாம் அவன் செயல்.....
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
19-ஏப்-201914:05:21 IST Report Abuse
blocked user பொய் செய்திகளை பரப்புவதில் பலர் முனைப்புக்காட்டுகிறார்கள்... அதே முனைப்பை வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்வதில் காட்டி இருந்தால் உண்மையான ஜனநாயகம் மலர்ந்து இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
19-ஏப்-201913:45:04 IST Report Abuse
SaiBaba படை படையாகப் படித்தவர்களும், அறிவாளிகளும் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள், வெளியேறிக்கொண்டு இருக்கின்றனர் மண்ணையும் மலையையும் கொள்ளை அடிப்பவர்களை வைத்துக்கொண்டு இந்தியா என்ன செய்யப்போகிறது?
Rate this:
Share this comment
Jayasankar Sundararaman - Chennai,இந்தியா
19-ஏப்-201916:49:08 IST Report Abuse
Jayasankar Sundararaman54 ஆண்டுகள் நாம் மௌன ராகம் பாடினோம், புலம்பி என்ன பயன் ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X