சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

காற்று மாசுகளை தின்னும் பாக்டீரியா!

Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (2)
Advertisement
காற்று மாசுகளை தின்னும் பாக்டீரியா!

பலவித ஆலைக் கழிவுகள், இயற்கைக் கழிவுகளிலிருந்து கசியும் மீத்தேன், காற்று மண்டலத்தில் கலந்து திரண்டு, பூமியிலிருந்து வெளியேறும் வெப்பத்தை தடுத்து நிறுத்துகிறது.

இதனால் புவி வெப்பமாதல் அதிகரிக்கிறது. வளி மண்டல மீத்தேனை அப்படியே கபளீகரம் செய்யும் ஒரு பேக்டீரியாவை ஐரோப்பிய விஞ்ஞானிகள் அண்மையில் அடையாளம் கண்டுள்ளனர்.

காற்றை உண்டு, காற்றிலேயே வாழும், 'மெதைலோகேப்சா கோர்கோனா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பேக்டீரியாக்கள், மீத்தேன், நைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் ஆகியவற்றை உட்கொண்டு உயிர்வாழ்கின்றன.

இந்த புதுவித பேக்டீரியாவை வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆய்வகத்திலேயே வைத்து வளர்க்கும் உத்தியையும் கண்டறிந்துள்ளனர்.

புவி வெப்பமாதலுக்கு காரணமான மாசுகளை உணவாக உட்கொள்ளும் இதுபோன்ற வேறு நுண்ணுயிரிகள் உள்ளனவா என்பதையும் வியன்னா விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

சில ஆண்டுகளில் அவற்றை ஏராளமான அளவில் காற்றில் கலந்துவிட்டு, மாசுபாட்டை வேகமாகக் குறைக்க முடியும் என, அந்த விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-ஏப்-201922:19:18 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் Reference: Widespread soil bacterium that oxidizes atmospheric methane - The only known biological sink for atmospheric methane is oxidation by methane oxidizing bacteria (MOB). Due to the lack of pure cultures, the physiology and metabolic potential of MOB that oxidize atmospheric methane remains a mystery. Here, we report on isolation and characterization of a MOB that can grow on air and utilizes methane at its atmospheric trace concentration as a carbon and energy source. Furthermore, this strain has the potential to utilize five additional atmospheric gases, carbon dioxide, carbon monoxide, hydrogen, nitrogen, and oxygen to supply its metabolism. This metabolic versatility might be the key to life on air and this discovery is essential for studying the biological methane sink.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Natarajan - chennai,இந்தியா
20-ஏப்-201908:32:49 IST Report Abuse
Ramesh Natarajan நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X