சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

குகை மனித எலும்புகள் கண்டுபிடிப்பு

Added : ஏப் 19, 2019
Advertisement
 குகை மனித எலும்புகள் கண்டுபிடிப்பு

பிலிப்பைன்சைச் சேர்ந்த லுாசோன் தீவில், ஒரு புதிய மனித இனத்தின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 'ஹோமோ லுசோனெசிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மனித இனம், அந்தத் தீவில், 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.

லுாசோன் தீவு, மனித எலும்புக்கூடுகள், மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒரு கட்டத்தை இட்டு நிரப்புவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பெரியவர்கள், ஒரு சிறுவயதினர் என்று மொத்தம் 12 எலும்புகளும், சில பற்களும் விஞ்ஞானிகளுக்குக் கிடைத்துள்ளன. இதை வைத்து இந்த இன மனிதர்கள் சற்று குள்ளமாக இருக்கக்கூடும் என்றும், 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன், ஆப்ரிக்காவில் வாழ்ந்த, 'ஆஸ்ட்ரலோபிதிகஸ்' வகை மனிதர்களின் உடற்கூறுகளுடன் சற்று ஒத்துப்போவதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த கண்டுபிடிப்பு, 'நேச்சர்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X