பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : ஏப் 19, 2019
Advertisement

காவிரி குடிநீரால் சுகாதார சீர்கேடு: குளித்தலை நகராட்சி பகுதியில் உள்ள, 24 வார்டுகளுக்கு நாப்பாளையம், பெரியபாலம் பரிசல்துறை காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, மேல்நிலை நீர்தேக்க தொட்டி வழியாக, மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நாப்பாளையம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து வழங்கப்படும் குடிநீர், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றத்துடன் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜி.யாகிக் அகமது, சிங்காரதோப்பு.

பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்: குளித்தலை அடுத்த கழுகூர் பஞ்., மாகாளிப்பட்டி நெடுஞ்சாலையில், யூனியனுக்கு சொந்தமான பெரியகுளத்தில் கடந்த, 2017 - 18ம் ஆண்டு அரசு உயர் நிலைப்பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்கூடம் திறந்த வெளியில் இருப்பதால் கால்நடைகள் நுழைகின்றன. இரவு மற்றும் விடுமுறை நாட்களில் குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம், சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- து. கனகராஜ், கழுகூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X