பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு : 91.3 % பேர் தேர்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு : 91.3 % பேர் தேர்ச்சி

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (1)

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று(ஏப்.,19) காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட்டன. இதில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.





பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகின. அரசு தேர்வுத் துறையின் www.tnresults.nic.in www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தங்கள் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம். தேர்வர்களின் பதிவு எண் பிறந்த தேதி மாதம் ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். படிக்கும் பள்ளிகளிலும் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.




தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 6 முதல் 13 வரை சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது.அதற்கு விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த தகவலை அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை நாளை காலை 9:00 மணி முதல் 26ம் தேதி வரை தங்கள் பள்ளிகளில் பெற்று கொள்ளலாம். தனி தேர்வர்கள் வரும் 24ம் தேதி காலை 9:00 மணி முதல் வரும் 26ம் தேதி வரை www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 91.3 சதவீதம் மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்களில் திருப்பூர் முதலிடத்திலும், ஈரோடு 2வது இடத்திலும், பெரம்பலூர் 3 வது இடத்திலும் உள்ளன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X