பொது செய்தி

இந்தியா

குறைந்தது ஓட்டுப்பதிவு

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (18)
Advertisement

புதுடில்லி : 2014 ம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடுகையில், 2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் சிறிது குறைந்து 68 சதவீதம் ஆகி உள்ளது.
2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் முதல் கட்ட ஓட்டுப்பதிவு ஏப்.,11 அன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 91 தொகுதிகளுக்கு நடந்தது. இதில், 69.4 சதவீதம் ஓட்டுக்கள் பதிவானது. அதே சமயம் 9 கட்டங்களாக நடத்தப்பட்ட 2014 தேர்தலின் முதல்கட்ட ஓட்டுப்பதிவில் 91 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 70.6 சதவீதம் ஓட்டுக்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது.



தற்போது 7 கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் நேற்று நடந்த 2 ம் கட்ட ஓட்டுப்பதிவில், மேற்குவங்கம் - 76.4 %, அசாம் - 76.4 %, புதுச்சேரி - 77.5%, சத்தீஸ்கர் - 73 %, மணிப்பூர் - 77.9 %, தமிழகம் - 71.1 % ஓட்டுக்கள் பதிவாகின. கர்நாடகாவில் 68.1 %, ஒடிசா - 58.4%, பீகார் - 62.04 %, உ.பி., - 62%, மகாராஷ்டிரா - 61.8 % ஓட்டுக்கள் பதிவாகின. மிக குறைந்தபட்சமாக காஷ்மீரில் 45.6 % ஓட்டுக்கள் பாதிவாகி உள்ளன.
காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதியில் 2014 ல் 25.9 % ஓட்டுக்கள் பதிவான நிலையில் 2019 ல் 14 % ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி உள்ளன.



சரிந்த ஓட்டுப்பதிவு :
அசாம் (5 தொகுதிகள்)2014- 78.6 %2019 - 76.4 %
பீகார் (5 தொகுதிகள்)2014 - 62.3%2019 - 62 %
காஷ்மீர் (2 தொகுதிகள்)2014 - 50.6 %2019 - 45.6 %
கர்நாடகா (14 தொகுதிகள்)2014 - 67.7 %2019 - 68.1 %
மகாராஷ்டிரா (10 தொகுதிகள்)2014 - 62.3 %2019 - 61.8 %
மணிப்பூர் (1 தொகுதி)2014 - 75.0 %2019 - 77.9 %
ஒடிசா (5 தொகுதி)2014 - 72.4 %2019 - 58.4 %
தமிழகம் (38 தொகுதிகள்)2014 - 73.6 %2019 - 71.1 %
உ.பி., (8 தொகுதிகள்)2014 - 61.7 %2019 - 62 %
மேற்குவங்கம் (3 தொகுதிகள்)2014 - 81.5 %2019 - 76.4 %
சத்தீஸ்கர் (3 தொகுதிகள்)2014 - 73 %2019 - 73 %
புதுச்சேரி (1 தொகுதி)2014 - 82.1 %2019 - 77.5 %
ஒட்டுமொத்தமாக 95 தொகுதிகள்2014 - 69.5 %2019 - 67.7 %

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravichandran - avudayarkoil,இந்தியா
19-ஏப்-201921:10:12 IST Report Abuse
ravichandran முடியாதது ஒன்றும் இல்லை சென்னையில் உள்ள ஒரு வாக்காளர் டெல்லியில இருந்து கொண்டு நெட்ல தமது தொகுதி வேட்பாளருக்கு வோட்டு போடுற மாதிரி செய்யணும்
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-ஏப்-201903:35:44 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்நம்ம வாக்குரிமை, தேர்தல், முக்கியமாக நாம் தேர்ந்தெடுக்கும் நமது பிரதிநிதிகள், அவர்களின் பொறுப்பு இதைப்பற்றிய அடிப்படை புரிந்து கொள்ளாத கருத்து என்று தான் சொல்லமுடியும். ஒரு வாக்காளர், வேட்பாளர் இவர்களின் உறவு அந்த வாக்காளர் வாழ்ந்து கொண்டிருக்கும் தொகுதியின் அடிப்படையில் வருவது. நான் பிறந்து வளர்ந்தது சென்னையாக இருந்தாலும், வேலைக்கு நான் டெல்லி சென்று அங்கேயே இருக்கிறேன் என்றால் அடிப்படையில் நான் அந்த டெல்லி தொகுதிவாசி ஆகி விட்டேன். அந்த தொகுதியின் நல்லது கெட்டதில் மட்டுமே நான் என் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். இது எத்தனை பேருக்கு புரிந்துள்ளது என்று தெரியவில்லை. ராணுவத்தில், வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் ஜனநாயக உரிமை சற்று வேறுபட்டிருக்கலாம். ஆனால் நான் பீகாரி, சென்னையில் வீட்டில் வாடகைக்கு இருந்து வேலை பார்க்கிறேன் என்றால், அந்த பீகாரிக்கு சென்னையில் தான் வாக்குரிமை. உங்கள் பதிவில், அந்தந்த தொகுதி வாக்காளர்கள், அவர்களது வாக்குகளை ஆன்லைன் மூலமாக போடுற மாதிரி செய்யலாம் என்றாலும் அதுவும் நடைமுறை சாத்தியமில்லை. நம்பகத்தன்மை இல்லாத ஒரு காரியமாகி விடும். கண்முன்னே நாகாலாந்து பாஜக துணை முதல்வர் ஆறு ஓட்டுக்களை பதிவு செய்யிறார். ஆயிரம் பேரு வீடியோ எடுக்கும் போதே இப்படி செய்யிறார். பூத்தை போலீஸ் உதவியுடன் மூடிக்கிட்டு பாமக குண்டர்கள் அவங்க இஷ்டத்துக்கு வோட்டு போடுறாங்க.. இதை முதலில் சரி செய்யமுடியுமான்னு பார்க்க சொல்லுங்க இந்த கையாலாகாத தேர்தல் ஆணையத்திடமும், ஊழல் பொங்கும் ஆளும்கட்சி அரசுகளிடமும். ஆன்லைனில் வோட்டு போட்டுட்டா மட்டும், உங்க வோட்டு தான் கடைசியில் எண்ணப்படுதா என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? ஊழல் என்பது இந்தியாவின் டி.என்.ஏ யில், இந்தியாவின் ஒவ்வொரு அணுவில், இந்தியாவின் ஒவ்வொரு செல்களிலும் இருக்கும் போது, ஊழல் தான் விளையும்....
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
19-ஏப்-201921:05:01 IST Report Abuse
ravichandran ஆதார் போன்ற சரியான ஒரே ஒரு நிரந்தரமான அடையாள அட்டை மட்டும் (குறிப்பாக அந்த அட்டையில் எல்லா எலெக்ட்ரானிக் வசதிகளுடன்) வழங்க வேண்டும் ATM மிஷின்களில் பணம் எடுப்பதுபோல் ஒரு மாதம் அல்லது ஒரு வாரம் டைம் கொடுத்து வோட்டு போட வாய்ப்பு கொடுத்தா நுறு சதவீதம் வாக்குகள் பதிவாக வாய்ப்பு வரலாம்
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
19-ஏப்-201921:03:38 IST Report Abuse
ravichandran ஆதார் போன்ற சரியான ஒரே ஒரு நிரந்தரமான அடைய அட்டை மட்டும் (குறிப்பாக அந்த அட்டையில் எல்லா எலெக்ட்ரானிக் வசதிகளுடன்) வழங்க வேண்டும் ATM மிஷின்களில் பணம் எடுப்பதுபோல் ஒரு மாதம் அல்லது ஒரு வாரம் டைம் கொடுத்து வோட்டு போட வாய்ப்பு கொடுத்தா நுறு சதவீதம் வாக்குகள் பதிவாக வாய்ப்பு வரலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X