அரசியல் செய்தி

தமிழ்நாடு

தர்மபுரி, பூந்தமல்லியில் கள்ள ஓட்டு புகார்

Added : ஏப் 19, 2019
Advertisement

சென்னை: தமிழகத்தில் தர்மபுரி மக்களவை மற்றும் பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிகளில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் 38 லோக்சபா மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களும் நடந்து முடிந்தன. பொதுவாக, அமைதியாகவே நடந்து முடிந்ததாக சொல்லப்பட்ட இத்தேர்தல் குறித்து தற்போது பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
தர்மபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை தொகுதி நத்தமேட்டில், கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டிருப்பதாக தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் குற்றம்சாட்டியுள்ளார். அந்த வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்தவேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல, பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதி, ஆவடி மேட்டுப்பாளையத்தில் மாலை 6 மணியளவில் திடீரென ஓட்டு மிஷினில் இருந்த சத்தம் வந்துள்ளது. ஆய்வு செய்தபோது 37 கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அந்த ஓட்டுச்சாவடியில் தி.மு.க., அ.தி.மு.க., முகவர்களிடையே வாக்குவாதம் நடந்துள்ளது.
இந்தப் புகார் குறித்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருப்பதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X