சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொன்னமராவதியில் 144 தடை உத்தரவு

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement
பொன்னமராவதியில், 144 தடை, உத்தரவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினர் குறித்து இழிவாக பேசி , நேற்று (ஏப்.,18) சமூக வலைதளங்களில் ஆடியோவாக வெளியிட்டனர்.




இதனால், கோபமடைந்த அவர்கள், இழிவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.




Advertisement


ஆனால், இன்னும் அவர்களை கைது செய்யவில்லை எனக்கூறி, பொன்னமராவதி பகுதியில், ஒருதரப்பை சேர்ந்தவர்கள் சாலைகளில் மரங்களை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் கல்வீச்சு சம்பவம் நடந்தது. 4 போலீசார் காயம் அடைந்தனர். 5 வாகனங்கள் சேதமடைந்தன.




போலீஸ் ஸ்டேசனில் நின்று கொண்டிருந்த டிஎஸ்பி கார், ஆலங்குடி இன்ஸ்பெக்டர் கார் மற்றும் ஆயுதப்படை வாகனங்களின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் வந்தது.


தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவின் பேரில் பொன்னமராவதி உள்ளிட்ட 30 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.













சிங்கம்புணரி


இதேபோல், இழிவாக பேசியவர்களை கைது செய்யக்கோரி சிங்கம்புணரியிலும் சாலை மறியல் நடந்தது. போலீசார் வராததால், புளியங்குடி பகுதியில், மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumal Kumaresan - singapore,இந்தியா
19-ஏப்-201914:38:50 IST Report Abuse
Thirumal Kumaresan மனிதனில் ஏற்ற தாழ்வு இல்லை. தேவை இல்லாமல் நாட்டில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். தவறாக பேசி இருந்தால் அந்த தரப்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்ப்பதே எல்லோருக்கும் சிறப்பு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X