சிவசேனாவில் இணைந்தார் பிரியங்கா சதுர்வேதி

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (10)
Advertisement
காங்கிரஸ், பிரியங்கா சதுர்வேதி, ராஜினாமா

புதுடில்லி : காங்கிரசில் இருந்து விலகிய அக்கட்சி செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, சிவசேனாவில் இணைந்தார்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்த பிரியங்கா சதுர்வேதி, நிதி நிறுவனம் மற்றும் விளம்பர கம்பெனியின் இயக்குனராக இருந்தார். தொடர்ந்து 2010 ல் இளைஞர் காங்கிரசில் இணைந்தார். 2012 ல் மேற்கு மும்பை இளைஞர் காங்கிரஸ் பொது செயலராக தேர்வு செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் அவரின் துரிதமான செயல்பாடு காரணமாக 2013ல் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக , நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் காங்கிரசின் சமூக வலைதள பக்கங்களை பிரியங்கா தான் கவனித்து வந்தார். 2016 ல், இந்தியாவில் வளரும் பெண் தலைவராக தேர்வானார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மதுராவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில நிர்வாகிகள் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பிரியங்கா புகார் தெரிவித்தார். இதனையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர்கள், சிறிது நாட்களில் கட்சியில் மீண்டும் இணைக்கப்பட்டனர். இதற்கு பிரியங்கா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், அதிருப்தி அடைந்த அவர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்தார். டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் என்ற பெயரையும் நீக்கினார்.

இந்நிலையில், அவர், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கே.வேணுகோபாலிற்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் கூறுகையில், '' காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சேர்ந்தேன். இளைஞர் காங்கிரசில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று அதை நிறைவேற்ற 100 சதவீதம் அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன்.

இந்த பதவி காரணமாக பல மிரட்டல்களையும், பாதுகாப்பின்மையையும் நானும், குழந்தைகள் உள்ளிட்ட எனது குடும்பத்தினரும் சந்தித்துள்ளோம். நான் கட்சியிலிருந்து எதையும் எதிர்பார்த்திராத நிலையிலும், கடந்த சில வாரங்களாகவே எனது சேவைகள் மதிக்கப்படவில்லை என்று கருதுகிறேன்.

மேலும், கட்சியில் சில தலைவர்கள் என்னிடம் தவறாக நடக்க முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவங்கள் கட்சியில் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் பிறகும் நீடிப்பது கண்ணியக்குறைவு என்பதால், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகிக்கொள்கிறேன்,'' என்று கட்சித் தலைவர் ராகுலுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளார்.

இதனிடையே, தேர்தல் நேரத்தில் செய்தித்தொடர்பாளர் ராஜினாமா மற்றும் அவரது குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது. அரசியல் வட்டாரத்தில் அவரது குற்றச்சாட்டுகள் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

இதனிடையில், ராஜினாமா செய்த பிரியங்கா சதுர்வேதி, உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் இணைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Uthiran - chennai,இந்தியா
19-ஏப்-201917:33:02 IST Report Abuse
Uthiran பல வருடங்களுக்கு முன்பு அந்த கட்சியின் தற்போதைய தலைவர் பற்றியே இது போன்று ஒரு புகார் வந்து, புகார் கொடுத்தவரின் குடும்பமே மொத்தமாக காணாமல் போனது. அப்படி இருக்கையில் அக்கட்சியின் தலைவர்கள் கண்ணிய குறைவாக நடந்தார்கள் என்பது ஒரு விஷயமே அல்ல. 'குத்து' ரம்யா போல் இருந்தால் இது ஒரு பிரச்சினையே இல்லையே..
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
19-ஏப்-201917:14:53 IST Report Abuse
BoochiMarunthu இவருக்கு சீட் கொடுக்காமல் நடிகை ஊர்மிளா வுக்கு சீட் கொடுத்ததால் இந்த முடிவு .இவர் கட்சியை விட்டு விலகுவதால் இவர் குடும்பத்தை சேர்ந்த 10 வாக்குகள் லாஸ் அவ்வளவு தான் . ராகுல் நீங்கள் நினைக்கும் அளவிற்கு குழந்தை யல்ல . அடக்கத்துடன் இருக்கும் அறிவாளி .
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-ஏப்-201915:11:51 IST Report Abuse
Nallavan Nallavan தலைமைக்கு குடும்பத்துக்கு ரொம்பவே விசுவாசமாக இருந்தார் ...... மோதியை ஆவேசத்துடன் எதிர்த்து வந்தார் ...... கூவியதற்கு பலன் கிடைக்காமல் போனால் (குறைந்த பட்சம் லோக் சபா சீட்டுக்கூட கிடைக்காவிட்டால்) என்ன செய்வார் பாவம் ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X