அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமமுக பொதுசெயலராக தினகரன்

Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (10)
Advertisement
அ.ம.மு.க., தினகரன், பொதுச்செயலாளர்

சென்னை : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளராக பதவி வகித்த தினகரன், தற்போது பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, அப்பதவியில் சசிகலா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, தலைமை அலுவலகத்தில் நடந்த அமமுக வின் நிர்வாகிகள் கூட்டத்தில் தினகரன் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், எல்லா தொகுதியிலும் அமமுக வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்களாகவே போட்டியிட்டனர்.
சின்னம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தபோது, நீதிமன்றத்தில் தினகரன் ஒத்துக்கொண்டபடி அமமுக என்னும் அமைப்பை, கட்சியாக தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய தினகரன் முடிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் தான் அவர் இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக, நிர்வாகிகள் கூறியுள்ளனர்.


அதிமுகவை மீட்க போராடுவோம்


இந்த தகவலை கட்சியின் செய்திதொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்;
உண்மையான அதிமுக தொண்டர்கள் அனைவரும் எங்களிடமே உள்ளனர். பணத்திற்கு, பதவிக்கோ ஆசைப்படும் யாரும் எங்களிடம் இல்லை. அதிமுகவினர் தேர்தலில் தோல்வியை சந்திப்பார்கள். மக்கள் மத்தியில் பா.ஜ., மீது பெரிய கோபம் உள்ளது. இவர்கள் பொருந்தாத கூட்டணியை அமைத்துள்ளனர். மக்கள் இந்த கூட்டணியை ஏற்கவில்லை. சசிகலா தான் இப்போதும் அதிமுகவின் பொதுசெயலர். சிறையில் இருந்து வந்து அவர் போராடுவார். கோர்ட்டுக்கு சென்று கட்சியை மீட்பார். இவ்வாறு சரஸ்வதி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pa.Arumugam - Fremont,யூ.எஸ்.ஏ
19-ஏப்-201920:07:02 IST Report Abuse
Pa.Arumugam ஏம்மா ..தினகரன் தொடர்பாளர்..நீயெல்லாம் எதற்காக அவருடன் இருக்கிறாய் என்பது தெரியாதா? சும்மா பீலா வுடுறியே..அவர் எப்பேர்ப்பட்ட 420 ..
Rate this:
Share this comment
Cancel
19-ஏப்-201919:45:34 IST Report Abuse
ஸாயிப்ரியா அதிமுக அம்மாவுடன் புதைந்த புதிர்களை தேடிக்கொண்டு இருக்கிறோம். இதுவரை இட்டிலி கணக்கு தான் வந்தது. அதிமுகவை மீட்க போகிறீர்களா?!!
Rate this:
Share this comment
Cancel
எருமை காப்பாளன் : கமல் சின்னம்மா வந்து கட்சியை மீட்டவுடன் இந்த கட்சி அதனுடன் இணையுமா? சரி தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X