தமிழகத்தில் பரவலாக கோடை மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பரவலாக கோடை மழை

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019

தேனி:தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது.
தேனி அல்லிநகரம், அன்னஞ்சி, பழனிசெட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது. இதனால் கடும் வெயிலால் அவதியுற்ற மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் மழை பெய்தது.

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தி் பரமத்தி வேலூர், ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
சேலம்: சேலம் மாவட்டத்தில், கோரிமேடு, அரசம்பட்டி, செட்டிசாவடி, ஏற்காடு மலையடிவாரம் அம்மம்பாளையம், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், ராமநாயக்கன்பாளையம் , செல்லியம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்கிறது.
கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, ஈசநத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X