பா.ஜ., வெற்றிக்கு உதவுவேன்: தேசியவாத காங்., எம்.பி,

Updated : ஏப் 19, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (16)
Advertisement
  பா.ஜ., வெற்றிக்கு, உதவுவேன்

மும்பை, ''மஹாராஷ்டிராவின் மாதா லோக்சபா தொகுதியில், பா.ஜ., வெற்றி பெற உதவுவேன்,'' என, தேசியவாத காங்கிரஸ், எம்.பி., விஜய் சிங் கூறியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிரா, சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மாதா லோக்சபா தொகுதிக்கு, வரும், 23ல், தேர்தல் நடக்கிறது. சரத் பவார் தலைமையிலான, தேசியவாத காங்.,கை சேர்ந்த, விஜய்சிங் மோஹித் பாட்டீல், எம்.பி.,யாக உள்ளார்.


மாதா லோக்சபா தொகுதியில், மிகுந்த செல்வாக்கு உடைய விஜய்சிங், இந்த முறை, தன் மகன், ரஞ்சித்சிங் மோஹித் பாட்டீலுக்கு, 'சீட்' கேட்டார். அதற்கு, தேசியவாத காங்., தலைமை மறுத்துவிட்டது. இதையடுத்து, ரஞ்சித் சிங், பா.ஜ.,வில் இணைந்தார்.

மாதா லோக்சபா தொகுதியில் போட்டியிட, ரஞ்சித் சிங்கிற்கு, பா.ஜ., சார்பில், 'சீட்' வழங்கப்பட்டது. ''மாதா லோக்சபா தொகுதியில், தேசியவாத காங்., வேட்பாளரை தோற்கடித்து, பா.ஜ.,வை வெற்றி பெற செய்ய, எல்லா உதவிகளையும் செய்வேன்,'' என, அவர் கூறியது, பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-ஏப்-201911:00:20 IST Report Abuse
Malick Raja இந்த பிழைப்பு பிழைப்பதற்கு ஓடுகின்ற ரயிலின் முன் விழுவதே மேல் ... இவிங்களுக்கெல்லாம் பதவி பவிசு இருந்துகொண்டே இருக்கவேண்டும் ..மக்கள் நிராகரிப்பதே சிறந்த வழியாகஇருக்க முடியும்
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
20-ஏப்-201915:26:10 IST Report Abuse
Chowkidar NandaIndiaஆனால் அந்தர் பல்டி சித்து ஓடும் ரயில் முன் விழவில்லையே. அவனை மக்கள் நிராகரிக்கவில்லையே. அவனுக்கு ஓட்டு போட்டு மந்திரியாக அல்லவா ஆக்கினார்கள். சத்ருகன் சின்ஹா, கீர்த்திஆசாத் போன்றவர்களையும் மக்கள் நிராகரிக்க வேண்டும்....
Rate this:
Share this comment
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
20-ஏப்-201915:42:43 IST Report Abuse
DSM .S/o PLM அதே பதவிக்காக, சீட் கிடைக்கவில்லை என்பதற்காக டீம்கா விற்கு தாவி அங்கே உட்கார்ந்திருக்கும் செந்தில் பாலாஜியை எந்த ரயில் முன் பாய்ந்து குதிக்க சொல்ல ? அப்புறம் அந்த கே கே எஸ் எஸ் ஆர் கூட ஒரு காலத்தில் டீம்கா வைஒழித்து கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று சொன்னார்.. அவரை ரயில் முன் குதிக்க சொல்லவா இல்லை அவரை கட்சியில் வெட்கமேயில்லாமல் சேர்த்துக்கோடா டீம்கா குடும்பத்தாரை குதிக்க சொல்லவா.... இப்படியே போனால் அப்புறம் தயாநிதி மாறன் வரை ஒவ்வொருத்தரா ரயில் முன் பாய வேண்டி வரும்.. வேண்டாம். கல்லக்குடியில் தொண்டர்களோடு சேர்ந்து ரயிலில் தலை வைக்க போய்விட்டு, கடைசி நிமிடத்தில் அவர்களெல்லாம் தலை ரயிலில் சிக்கி செத்துப்போக கட்டுமரம் மட்டும் எழுந்து ஓடிவந்த விஷயம் ஞாபகம் வந்து தொலைக்கிறது.. விட்டுவிடுவோம் .....
Rate this:
Share this comment
Cancel
Madhavarao Neelamegam - Mumbai,இந்தியா
20-ஏப்-201909:12:16 IST Report Abuse
Madhavarao Neelamegam FULL TIME JOB AT NCP AND PART TIME JOB AT BJP
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஏப்-201908:06:22 IST Report Abuse
Srinivasan Kannaiya இன்றைய பெட்ரோல்/டீசல் விலையை பார்த்தும் இப்பிடி சொல்லுகிறார் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X