பதிவு செய்த நாள் :
'நியாய் - பொருளாதாரத்தை மீட்கும்
வேலைவாய்ப்பை உருவாக்கும்'

பாஜிபுரா: ''பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளின் பொருளாதாரத்தை மீட்கவும், வேலைவாய்ப்பு களை உருவாக்கவும், 'நியாய்' திட்டம் உதவும்,'' என, காங்கிரஸ் தலைவர், ராகுல் தெரிவித்து உள்ளார்.

நியாய், பொருளாதாரம்,  வேலைவாய்ப்பு, ராகுல்

குஜராத்தின் பாஜிபுரா லோக்சபா தொகுதியின், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, அவர் பேசியதாவது:நாங்கள், ஏழைகளுக்கு, ஆண்டுக்குரூ. 72 ஆயிரம்வழங்கும், 'நியாய்' திட்டத்தை அறிவித்து உள்ளோம். இதனால், ஏழைகளின் பொருளாதார நிலை மாறும் .காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,ரூ. 3.60 லட்சம்

கோடி செலவிலான, இத்திட்டத்தை நிச்சயம் செயல்படுத்துவோம்.

45 சதவீதம்


மோடியின், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்,பணப்புழக்கம் குறைந்ததால், மக்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்தி விட்டனர்.இதனால், தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டு, வேலையில்லா திண்டாட்டம், 45 சதவீதமாக உயர்ந்துள்ளது. 'நியாய்' திட்டம் மூலம் பெறும் பணத்தால், மக் களை பொருட்கள் வாங்குவர். இதனால், நிறுவனங் கள் மறுமலர்ச்சி அடையும். வேலைவாய்ப்பு கிடைக்கும்.மோடி, பணக்காரர்களுக்குத் தான் காவலாளி.அவர் அனில் அம்பானியின் காவலாளி.

சாதாரணமக்களுக்கு காவலாளி எதற்கு? விவசாயி வீட்டில், காவலாளி தேவையில்லையே. ஆனால், இந்த காவலாளி, அம்பானிக்கு, ரூ.30 ஆயிரம் கோடி கொடுத்துள்ளார். இந்த காவலாளி ஒரு திருடன். மோடி அரசின், புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தில்,

Advertisement

பல மாநிலங்கள், மாவட்டங்கள், தொழில் அதிபர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

கடன் தள்ளுபடி


மத்தியில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கடன் தவணை செலுத்தாத விவசாயிகளை சிறைக்கு அனுப்பக் கூடாது என, சட்டம் இயற்றுவோம். மோடிக்கு, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய பணமில்லை; ஆனால், பெரிய தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்ய, பணம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL - tirumalai,இந்தியா
22-ஏப்-201919:16:56 IST Report Abuse

SENTHILஇவர் மூஞ்சியை பார்க்கும்போதே ஒரு களை இல்லாத தன்மை தெரிகிறது. சிரிப்பும் வருகிறது, அதே நேரத்தில் கோபமும் வருகிறது. என்ன ஒரு டிசைன்-ஓ தெரியவில்லை. இவரை பற்றி ராம் ஜெத்மலானி என்ன சொன்னார், நினைவு இருக்கிறதா.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஏப்-201920:31:43 IST Report Abuse

Pugazh Vவழக்கம் போல ராகுல் காந்தியை தனிமனித தாக்குதல்கள் செய்திருப்பது தவிர வேறு ஏதேனும் உருப்படியா யாராவது எழுதியிருக்கிறார்களா? வருடத்திற்கு ரூ.6000 ம், மாதம். ரூ.2000 மும் கொடுத்தால் மட்டும் எல்லா வனும் வேலைக்கு வருவானா?இது தப்பில்லையா?

Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
20-ஏப்-201920:30:53 IST Report Abuse

Ram Sekar///...வாசகர்கள் சிந்திக்க பதிவிட விழைகிறேன்../// "புகழ் வி" தம்பிக்கு வாழ்த்துக்கள்.

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X