பதிவு செய்த நாள் :
ஒரே மேடையில்...:
24 ஆண்டுக்கு பின் முலாயம் - மாயாவதி
ஒருவருக்கு ஒருவர் பாராட்டு மழை

மெயின்புரி: உத்தர பிரதேசத்தில், பரம அரசியல் எதிரிகளாக இருந்த, சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவும்,பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியும், 24 ஆண்டுகளுக்கு பின், நேற்று ஒரே மேடையில் தோன்றி, ஒருவருக்குஒருவர் பாராட்டு மழை பொழிந்தனர். உத்தர பிரதேத்தில், பா.ஜ.,வின் அசுர வளர்ச்சியை தடுப்பதற்காக, பரம அரசியல் எதிரிகளாக இருந்த, பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும், தற்போதைய லோக்சபா தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிடு கின்றன.
கூட்டணிக்குப் பின், இரு கட்சிகளின் நிர்வாகிகளிடையே ஒருங்கிணைப்பு இருந்தாலும், தொண்டர்களிடையே ஒற்றுமை இல்லாமல் இருந்தது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக,சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ், 79, போட்டியிடும், மெயின்புரி தொகுதியில், இரு கட்சிகளின் சார்பில், நேற்று, பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், 24 ஆண்டு களுக்கு பின், முலாயம் சிங் யாதவும், மாயாவதியும், ஒரே மேடையில் தோன்றினர்; இது, இரு கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த கூட்டத்தில், முதலில் பேசிய, சமாஜ்வாதி, எம்.எல்.ஏ., ஒருவர், மாயாவதியின் காலை தொட்டு வணங்கி, ஆசிர்வாதம் பெற்றார்.வயது மூப்பு காரணமாக, முலாயம் சிங் யாதவ், சிறிது

நேரம் தான் பேசினார்.அவர் பேசியதாவது:நானும், மாயாவதியும், பல ஆண்டுகளுக்கு பின், ஒரே மேடையில் தோன்றுவது, மகிழ்ச்சியாக உள்ளது.
மாயாவதிக்கு, நம் கட்சியினர் எல்லாரும் மரியாதை கொடுக்க வேண்டும். இதுதான், எனக்கு கடைசி தேர்தல். இனி, தேர்தலில் போட்டியிட மாட்டேன். எனவே, இந்தத் தேர்தலில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதன்பின், மாயாவதி பேசியதாவது:முலாயம் சிங் யாதவ், பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக பாடுபடும் உண்மையான தலைவர். இவர், பிரதமர் மோடியை போன்ற போலியான தலைவர் இல்லை. அதனால் தான், பகையை மறைந்து, இப்போது இங்கு வந்துள்ளேன்.நான், இங்கு வந்திருப்பது, சிலருக்கு ஆச்சரியமாவும், அதிர்ச்சியாகவும் இருக்கலாம். நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும், சில கடினமான முடிவுகளைஎடுக்க வேண்டியுள்ளது. முலாயம் சிங் யாதவ் போன்ற, அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பாடுபடும் தலைவருக்காக, இது போன்ற முடிவுகளை எடுத்தேன்.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க, அகிலேஷ் யாதவ் முடிவு செய்ததும், அதற்கு, முலாயம் சிங் யாதவ், எதிர்ப்பு தெரிவித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

சமாஜ்வாதி கட்சி, உ.பி.,யில், மூன்று முறை தனித்து ஆட்சியை பிடித்தது. மூன்று முறையும், நானே முதல்வராக இருந்தேன்.ஆனால், இப்போது, லோக்சபாவில் உள்ள மொத்த தொகுதிகளில், 50 சதவீதத்தை, பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கி விட்டு, அந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததை, என்னால் ஏற்க முடியவில்லை.இவ்வாறு, அவர் கூறியிருந்தார்.

ஆனாலும், பகுஜனும், சமாஜ்வாதியும் தனியாக நின்றால், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற

Advertisement

முடியாது எனக் கருதிய அகிலேஷ் யாதவ், கூட்டணி முடிவில் உறுதியாக இருந்தார். தன் தந்தை, முலாயம் சிங்கை சமாதானப்படுத் தினார்.இருவரையும், ஒரே மேடையில் தோன்ற வைக்க, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனாலும், தியோபந்த், படாவுன், ஆக்ரா போன்ற நகரங்களில் நடந்த பிரசார கூட்டங்களில், முலாயம் சிங் யாதவ், பங்கேற்க மறுத்து விட்டார்.தற்போது, மெயின்புரியில், தன் தந்தையை சமாதானாப்படுத்தி, மாயாவதியுடன், ஒரே மேடையில் பங்கேற்க வைத்து விட்டார்.

மோடி அலை வீசுகிறது!

உத்தர பிரதேச மக்கள், பிரதமர் மோடி மீதுநம்பிக்கை வைத்துள்ளனர். இங்கு, மோடி அலை வீசுகிறது. இதனால், கலக்கம் அடைந்துள்ள,மாயாவதியும், முலாயம் சிங் யாதவும்,ஒரே மேடையில் தோன்றியுள்ளனர். தன் உயிருக்கு ஆபத்து என, மாயாவதி,யாரை கைகாட்டினாரோ, அதே முலாயம் சிங்யாதவுடன், இன்று இணைந்துள்ளார்.ஷாநவாஸ் உசேன்செய்தி தொடர்பாளர், பா.ஜ.,

விருந்தினர் விடுதி தாக்குதல்

கடந்த, 1990களின் துவக்கத்தில், பா.ஜ.,வுக்கு, உ.பி.,யில் அதிக செல்வாக்கு இருந்தது. இதனால், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. முலாயம் சிங் யாதவும், மாயாவதியும், இதை உணர்ந்து, சிறிய கட்சிகளுடன் இணைந்து, கூட்டணி ஆட்சி அமைத்தனர்.

இந்நிலையில், 1995ல், முலாயம் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, மாயாவதி திடீரென, 'வாபஸ்' பெற்றார். இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து சில, எம்.எல்.ஏ.,க்களை இழுத்து, தன் அரசை காப்பாற்ற, முலாயம் முயற்சித்தார்.இதனால், லக்னோவில் உள்ள விருந்தினர் விடுதியில், தங்கள் கட்சி, எம்.எல்.ஏ.,க்களுடன், மாயாவதி ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அங்கு வந்த, சமாஜ்வாதி கட்சியினர், மாயாவதி மீது தாக்குதல் நடத்தினர். அவர், தன்னை காப்பாற்றுவதற்காக, ஒரு அறைக்குள் சென்று, தாழிட்டுக் கொண்டார்.பெரும் கலவரத்தில் முடிந்த இந்த மோதல், உ.பி., அரசியல் வரலாற்றில், 'கெஸ்ட் ஹவுஸ் சம்பவம்' என, இன்றும் பேசப்படுகிறது.இந்த மோதலுக்கு பின், முலாயம் சிங்கும், மாயாவதியும், பரம விரோதிகளாக மாறினர். தற்போது, அகிலேஷ் யாதவின் முயற்சியால், இருவரும் ஒரே மேடையில் தோன்றியுள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (11+ 14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pazhaniappan - chennai,இந்தியா
20-ஏப்-201921:15:33 IST Report Abuse

pazhaniappanமிகச்சரியான ,சாதுர்யமான முடிவு , உண்மையில் அகிலேஷின் பெருந்தன்மையை பாராட்டியாக வேண்டும் , தனது கட்சியை விட, சிறிது பலம் குறைந்த கட்சியான மாயாவதி கட்சிக்கும் தங்கள் கட்சிக்கு இணையாக இடங்களை ஒதுக்கி கொடுத்து பிஜேபி யை வெல்ல இந்த முடிவை தவிர வேறொன்டும் இல்லை என்பதை உணர்ந்து எடுத்திருக்கிறார் , பாராட்டுக்கள் . பிஜேபி ஆட்சி இலக்கப்போவதற்கு காரணமாக அமையப்போகிற இந்த முடிவு பாராட்டுக்குரியது

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஏப்-201920:53:29 IST Report Abuse

Pugazh Vஇவர்களுக்கு அதிகாரம் பணம் ஆகியவைதான் குறி அதற்காக எந்த நிலைவேண்டுமானாலும் எடுப்பார்கள் விவஸ்த்தையில்லாதவர்கள் என்று சொல்கிறீர்கள்? ரொம்ப சரி

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
20-ஏப்-201920:37:56 IST Report Abuse

Bhaskaranஇவர்களுக்கு அதிகாரம் பணம் ஆகியவைதான் குறி அதற்காக எந்த நிலைவேண்டுமானாலும் எடுப்பார்கள் விவஸ்த்தையில்லாதவர்கள்

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X